- Advertisement -
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் பரவலாக மிதமான மழை பெய்தது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், காமராஜர் சாலை, கோபாலபுரம், பட்டினப்பாக்கம், அரும்பாக்கம், தேனாம்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இந்த மழையால் சென்னையின் வெப்பநிலை சற்று குறைந்தது. நேற்று நள்ளிரவு சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.
இந்நிலையில், இன்று (நவ .8) மதியம் முதல் இரவு வரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Advertisement -