Monday, April 15, 2024 8:28 pm

போடுறா வெடிய தல ரசிகர்களே ரெடியா! விடாமுயற்சி படத்தின் முதல் அப்டேட் எப்போ வருது தெரியுமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மகிழ் திருமேனியுடன் அஜித் குமார் நடித்துள்ள ‘விடா முயற்சி’ திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போது, ஆக்‌ஷன் த்ரில்லரான இப்படத்தில் ஒரு புதிய நடிகர் சேர்க்கப்படுவது போல் தெரிகிறது. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரெஜினா கசாண்ட்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர்கள் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிறது ‘விடாமுயற்சி’. மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இப்படம் துவங்குவது தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருந்தது. ரசிகர்களும் இப்படத்தின் அப்டேட்டிற்காக தவமாய் தவம் கிடந்தனர். இதனையடுத்து ஒரு வழியாக இதன் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. ஆனாலும் அதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் ரசிகர்களை ஏமாற்றினர் படக்குழுவினர்.

கடைசியாக அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு ‘துணிவு’ படம் வெளியானது. இப்படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே ‘ஏகே 62’ குறித்த அறிவிப்பு வெளியானாலும், படப்பிடிப்பு துவங்குவது தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இயக்குனர் மாற்றம், அஜித்தின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என சில மாதங்களாகவே ‘ஏகே 62’ படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இதனையடுத்து ஒரு வழியாக கடந்த மே மாதம் ‘விடாமுயற்சி’ டைட்டிலுடன் அஜித்தை மகிழ் திருமேனி இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனாலும் படப்பிடிப்பு துவங்கவில்லை. இந்நிலையில் அண்மையில் தான் இதன் ஷுட்டிங் அஜர்பைஜானில் துவங்கியது. ரசிகர்கள் நீண்ட காலமாக இப்படத்தின் அப்டேட்டிற்காக காத்து வந்தாலும், படப்பிடிப்பு துவங்கப்பட்டது குறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ‘லியோ’ வெற்றி விழாவில் வைத்து ‘விடாமுயற்சி’ படம் குறித்து திரிஷா பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ‘லியோ’ படம் குறித்து பேசிய திரிஷா, அர்ஜுன் சாரும் நானும் லக்கி. நாங்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறோம். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.இதன்மூலமாக ‘விடாமுயற்சி’ படம் குறித்து தான் திரிஷா பேசியுள்ளார் என்பது கன்பார்ம் ஆகியுள்ளது. ஏற்கனவே அஜித், திரிஷா, அர்ஜுன் மூவரும் இணைந்து ‘மங்காத்தா’ படத்தில் நடித்திருந்தனர். இந்தப்படம் வேறலெவலில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இதனையடுத்து தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ‘விடாமுயற்சி’ படம் எப்படி வர போகிறது என இனிமேல் கவலைப்பட தேவையில்லை என கூறி வருகின்றனர் ரசிகர்கள். மேலும், இப்படத்தில் பிக்பாஸ் ஆரவ்வும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.அர்ஜுன் சைடு வில்லனாக இருப்பார் என்றும் கிசு கிசு கப்படுகிறது

இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் அதிரடியாக உடல் எடையைக் குறைத்து இருந்தாலும் வயதான தோற்றத்தில் தான் தெரிகிறார் அதனால் நிச்சயம் இந்த படத்தில் அஜித் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மகிழ்திருமேனி ஏற்கனவே அஜித்திடம் மூன்று கதைகளை முதலில் சொல்லி உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அதில் முதல் கதையை தற்போது படமாக எடுத்து வருகிறாராம் இந்த படத்தில் அஜித் இளமை மற்றும் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


முதலில் வயதான தோற்றத்தை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம். அதை முடித்துவிட்டு பின் இளமையான அஜித்தை வைத்து படத்தை எடுக்கலாம் என கூறப்படுகிறது இதனால் ரிவர்ஸ் கியர் போட்டு அஜித்தின் 62 படத்தை எடுக்க இருக்கிறார் மகிழ்திருமேனி.


அது மட்டும் இல்லாமல் லியோ படத்தில் சுப்ரமணிக்கு போட்டியாக விடாமுயற்சி படத்தில் களம் இறங்கும் விலங்கு இது தான் தற்போது இதை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகினற்னர் .இந்நிலையில் வரும் தீபாவளி அன்று விடாமுயற்சி படத்தின் முதல் அப்டேட் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது


லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அஜித் குமார் ஒரு படம் செய்யவிருந்தார். இருப்பினும், விக்னேஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையேயான ஆக்கப்பூர்வமான கருத்து வேறுபாடுகளால் படம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பிறகு, இயக்குனர் மகிழ் திருமேனியை வைத்து படம் பண்ண ஒப்பந்தம் செய்யப்பட்டார். சஞ்சய் தத் மற்றும் ஆரவ் ஆகியோர் ‘விடா முயர்ச்சி’ நடிகர்களின் ஒரு பகுதியாக உள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘விடா முயற்சி’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். படக்குழுவில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் எடிட்டர் என்.பி.ஸ்ரீகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்