- Advertisement -
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்குத் தினசரி இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து, கடந்த 4 நாட்களாகத் தொடர் மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த மண் சரிவு காரணமாக, ரயில் பாதையில் பாறைகள் விழுந்தன. இதனால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மலை ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து, இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து முதல் மலை ரயில் உதகைக்குப் புறப்பட்டது. இந்த ரயிலில் சுமார் 180 பயணிகள் பயணம் செய்தனர்.
மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- Advertisement -