பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசியது விவாதப் பொருளாகியுள்ளது. அதில், “மனைவிக்குக் கல்வி அறிவு இருந்தால், கணவருடன் உடலுறவு கொண்டாலும் கருத்தரித்தல் நிகழ்வதை அவர் தடுத்துவிடுவார். இதனால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முடியும்” எனச் சைகையுடன் விளக்கி அவர் பேசியது பலரது மத்தியில் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.
முதல்வர் நிதிஷ்குமாரின் பேச்சு குறித்து சமூக வலைத்தளங்களில் பலவிதமான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
சிலர், நிதிஷ்குமாரின் பேச்சு ஆதரவிற்குரியது என்றும், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்து பேசியுள்ளார் என்றும் கூறுகின்றனர். மற்றவர்கள், நிதிஷ்குமாரின் பேச்சு ஆபாசமானது என்றும், பெண்களை அவமதிப்பதாகும் என்றும் கூறுகின்றனர்.