Thursday, April 18, 2024 6:12 am

ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் பேட்டிங்கை புகழ்ந்த கிரிக்கெட் ஜாம்பவான்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை 39வது லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு மேக்ஸ்வெல்லின் பேட்டிங் முக்கிய பங்கு வகித்தது.

மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ரன்கள் எடுத்தார். அவரது இறுதி 30 பந்துகளில் அவர் 66 ரன்கள் எடுத்தார். இந்த பேட்டிங்கை பார்த்து, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் தற்போதைய கேப்டன் விராட் கோலி ஆகியோர் புகழாரம் தெரிவித்தனர்.

அதன்படி, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் அவர்கள், “என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகச்சிறந்த ODI பேட்டிங் இது! MAX அழுத்தத்திலிருந்து, MAX செயல்திறன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதைப்போல், இந்திய வீரர் விராட் கோலி அவர்கள் மேஸ்வெல் குறித்து, “உன்னால் மட்டுமே இதைச் செய்ய முடியும். ஒரு அற்புதமான பேட்டிங். உங்கள் திறமைக்கு நன்றி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேசமயம், தற்போது மேக்ஸ்வெல்லின் இந்த பேட்டிங் உலக கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அவரது பேட்டிங்கை பார்த்து பலரும் வியந்து போயுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்