Thursday, June 13, 2024 3:35 pm

விஜய் தனது மனைவியுடன் சேரமாட்டார்! விஜய் ஜாதகத்தில் முதல்வர் யோகம் இருக்கா ?உறுதியான ஜோதிட கட்டங்களின் கணிப்பு என்ன தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் இந்த அனல் பறக்கும் பேச்சு மூலம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இப்போது, ​​நட்சத்திர நடிகர் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது வரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க பாங்காக் சென்றார், இது தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று அழைக்கப்படுகிறது.

அண்மையில் இடம்பெற்ற லியோ வெற்றிவிழாவில் விஜய் 2026ம் ஆண்டு அரசியலுக்கு வருவார் என பேசப்பட்டது. தற்போது குறித்த தகவல் வைரலாகி அவரது ஜோதிடமும் கணிக்கப்பட்டு தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயின் மனைவி சங்கீதா கணவரை விட்டு பிரிந்து லண்டனில் வசித்து வருவதாகவும் சென்னைக்கு வருவதை முற்றிலும் தவிர்த்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. பொதுவாக விஜய் நடிக்கும் படத்தின் அனைத்து ஆடியோ வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டு வந்த மனைவி சங்கீதா நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இதன் பின்பே, நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்கின்ற ஒரு செய்தி காற்று தீயாக பரவியது. இதற்கு பின்னணி காரணம் நடிகை ஒருவருடன் விஜய் கிசு கிசுவில் சிக்கியது தான், சங்கீதா மற்றும் விஜய் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும், அந்தப் பிரச்சனை உச்ச கட்டத்தை அடைந்ததும் சங்கீதா விஜய்யை விட்டு பிரிந்து லண்டனில் இருக்கும் தந்தை வீட்டில் வசித்து வருவதாக கூறப்பட்டு வந்தது.

மேலும் விஜய் மகன் ஜோசன் சஞ்சய் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நிலையில், அவர் இயக்குனராக அறிமுகம் ஆகும் விஷயம் செய்திகள் மூலம் வெளியான பின்பே விஜய்க்கு தெரிய வந்ததும் என்றும், அந்த வகையில் தாய் – தந்தை இருவருக்கு பிரச்சனை என்றதும் தாய் சங்கீதா உடன் லண்டனில் இருந்து வரும் ஜோசன் சஞ்சய், தாய் சிபாரிசில் லண்டனில் உள்ள லைக்கா நிறுவனத்திடம் இயக்குனர் ஆகும் வாய்ப்பை பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த லியோ படத்தின் வெற்றி விழா கொண்ட்டாட்டத்தில் விஜய் மனைவி சங்கீதா கலந்து கொள்வார், விஜய் – சங்கீதா இருவருக்கும் இடையில் பிரச்சனை என்கிற வரும் செய்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் இருக்கும் சங்கீதா லியோ வெற்றி விழாவில் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்வு என எதிர்பார்க்க பட்ட நிலையில் சங்கீதா லியோ வெற்றி விழா நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் விஜய் குடும்பத்தில் என்ன தான் பிரச்னை என்பதை பற்றி சில திடுக்கிடும் தகவலை பிரபல சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார், அவர் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை த்ரிஷாவுடன் மீண்டும் நடிக்கக்கூடாது என சங்கீதா கட்டளையிட்டதாகவும் அதையும் மீறித்தான் விஜய் இதில் நடித்தார் என்ற செய்தி வருகிறது. அதை யாரும் மறுக்கவும் இல்லை. அதேபோல் விஜய் தன்னுடைய கட்டளையை மீறி நடித்ததாலும் குறிப்பாக லிப் லாக் காட்சியில் நடித்ததாலும் சங்கீதா ரொம்பவே வருத்தப்பட்டார் என்றும் சொல்கிறார்கள்.

லிப் லாக் காட்சியில் நடிப்பதற்கு த்ரிஷா தயாராகத்தான் இருந்தார். இன்னும் சொல்லப்போனால் லியோ படத்தில் த்ரிஷா நடிப்பதற்கான வாய்ப்பே அந்த லிப் லாக் காட்சிதான். விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தற்பொழுது சென்னையில் இருந்தாலும் கூட இதுவரை அவரே அவருடைய தந்தை நடித்த லியோ படத்தை பார்க்க வில்லை என்றும், மகன் மட்டுமில்லை மகளும் பார்க்கவில்லை. இப்படி சங்கீதா, மகன், மகள் யாருமே விஜய் நடித்த லியோ படத்தை பார்க்கவில்லை என சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் லியோ வெற்றி விழாவில் விஜய் மனைவி சங்கீதா கலந்து கொள்ளவார், வழக்கம் போல் கணவர் விஜய் அருகில் அமர்ந்து விழாவை மகிழ்ச்சியுடன் ரசிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சங்கீதா இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை, ஆனால் விஜய் அருகில் அதாவது மனைவி சங்கீதா இருக்க வேண்டிய இடத்தில் நடிகை திரிஷா லியோ வெற்றி விழாவில் ஜோடியாக அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் திரிஷாவை தன்னுடைய அருகில் அமர வைத்தது மட்டுமில்லாமல், நிகழ்ச்சியில் பேசிய விஜய், “20 வயசுல ஒரு பொண்ணு ஹீரோயின் ஆவதற்கு விஷயம் இல்ல. 20 வருஷமாகவே ஹீரோயினா தக்க வைக்கிறது இருக்கே.. அதுவும் அதே எனர்ஜியோட! அது யாரு நம்ம இளவரசி குந்தவை தான்” என திரிஷாவை புகழந்து பேசியுள்ளது, மேலும் விஜய் குடும்பத்தில் புகைச்சலை ஏற்படுத்தும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

இந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என பேசப்படுவதற்கு காரணம் என்ன என்றால், சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் எனக் கூறிவிட்டு, பின் தனது உடல்நிலைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை எனக் கூறிவிட்டார்.

எனவே, ரஜினி போல் வருவேன், ஆனா வரமாட்டேன் என்ற வகையில், விஜய்யின் அரசியல் அறிவிப்பும் இருந்துவிடுமோ? அல்லது இது சினிமா ப்ரோமோஷனுக்கான யுக்தி அமைந்துவிடுமா? போன்ற பல கேள்விகள் பொதுவாகவே விவாதிக்கப்படுகிறது. தற்போதைய காலங்களில் நடிகர் விஜய் தமிழக மக்களின் உள்ளம் கவர்ந்த நாயகனாக வலம் வருகிறார். இவ்வாறான நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அவரின் சொந்த ஜாதகம் என்ன கூறுகிறது என்பதை பார்க்கலாம்.

அதன்படி அவருடன் ஒத்த ஜாதகங்கள் கலை துறையின் மூலம் அரசியலில் அடி எடுத்து வைப்பதையே காட்டுகிறது. கலைத்துறையில் சாதித்து, அதன் வழியே அதிகாரப் பதவியில் அமர்வதையும் குறிக்கிறது . இதை வைத்துப்பார்த்தால் நிச்சயமாக நடிகர் விஜய் தீவிர அரசியலுக்கு வருவார் என்பதை அவரது ஜாதகக் கட்டங்கள் சொல்வதாக கூறப்படுகிறது.

அதேபோல, வருகிற 2026 இல் நடக்கவிருக்கிற சட்டப்பேரவைத் தேர்தலிலும் நடிகர் விஜய் கணிசமான வெற்றியை நிச்சயம் பெறுவார் என்பதே கணிப்பு.

அவரது ஜாதக கட்டங்களின்படி, அவருக்கு இளைஞர்களின் பலமும், தாய்மார்களின் அன்பும் பெருகுவது நிச்சயம். நடிகர் விஜய், தமக்கு கலைத்துறையின் மூலம் கிடைத்த பெயரைச் சிறிதும் கலங்கமில்லாமல் அரசியலில் அப்படியே கொண்டு செல்ல முடியும். அதை அவர் சரியாகச் செய்தாலே போதும், வெற்றி வீட்டு வாசலைத் தேடி வரும் எனக் கூறுகிறது ஜாதகக் கட்டங்கள். அதன்படி, 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றால் தீவிர அரசியலில் விஜய் நுழைந்தால் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெறுவார் என கூறப்படுகிறது. ஆனால், அது ஆட்சியை அமைக்கும் வகையில் இருக்காது என்றும் மக்கள் பேசக்கூடிய அளவிலான வெற்றியாக இருக்கும் என்பதைதான் கணிப்புகள் சொல்கின்றன.

மேலும், தற்போது விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து ‘கப்பு முக்கியம் பிகிலு’ என்று கூறுவது, தேர்தலில் வெற்றி பெறுவது தான் முக்கியம் என்பதையே வெளிப்படையாக தனது ரசிர்களுக்கு சொல்வதையே காட்டுகிறது.

இதேவேளை, ஆரம்ப காலங்களில் சொல்லிக் கொள்ளும் அளவு வெற்றிகளைப் பெற்றாலும், 2030-க்குப் பிறகு அமோக வெற்றிகளைப் பெறுவார் என்பதே இறுதியான கணிப்பாக கூறப்படுகிறது.விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் முழுமையான ஆக்‌ஷன் த்ரில்லர் படத்திற்காக கடந்த மாத தொடக்கத்தில், நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று 3டி விஎஃப்எக்ஸ் ஸ்கேன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .

- Advertisement -

சமீபத்திய கதைகள்