Tuesday, June 18, 2024 5:02 pm

தங்கலான் பட டீசர் எப்படி இருக்கு ? இதையெல்லாம் கவனித்தீர்களா முழு விமர்சனம் இதோ !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படம் தயாரிப்பாளர்களால் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இப்படம் ஜனவரி 26, 2024 அன்று திரையரங்குகளில் வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

பா ரஞ்சித் இயக்கத்தில், தங்கலானில் மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி, டேனியல் கால்டாகிரோன், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கர்நாடகாவின் கோலார் தங்க வயலின் தோற்றம் பற்றிய கதையை தங்கலன் காண்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ப்டம் ‘தங்கலான்’. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டும் விக்ரம் இந்த படத்திலும் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். கே.ஜி.எஃப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தங்கலான் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள கேஜிஎஃப்பில் நடைபெற்றது. படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இரத்தப் போர்கள் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் என்று ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியாகியுள்ளது.

ஆனால், அதே சமயம் டீசரை பார்த்தால் போர்க்களத்தை தவிர கதைக்களம் பெரிதாக இருப்பது போல தெரியவில்லையே என்கிற குறையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படத்தான் செய்கிறது.

தங்கலான் டீசர் ரிலீஸ்: சார்பட்டா பரம்பரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களை தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தங்கலான். சியான் விக்ரம் நடிப்பில் பீரியட் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் காட்டுவாசி கெட்டப்பில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோலார் தங்க வயலில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருப்பதாக பா. ரஞ்சித் தெரிவித்து இருந்தார்.

பொன்னியின் செல்வன் எஃபெக்ட்: தங்கலான் டீசரை பார்க்கிறோமா அல்லது பொன்னியின் செல்வன் மற்றும் யாத்திசை படத்தின் டீசரை பார்க்கிறோமா என்கிற அளவுக்கு தங்கலான் டீசரை பார்த்ததும் பல சந்தேகங்கள் கிளம்புகின்றன. சியான் விக்ரமின் உடல் மொழி, உழைப்பு எல்லாம் தெளிவாக தெரிந்தாலும், பா. ரஞ்சித் சொல்ல வரும் கதை தான் புரியவில்லை என விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

கோப்ராவை கொன்னுட்டாரு: ஒரு ராஜ நாகத்தின் தலையை சியான் விக்ரம் பிய்த்து எறியும் காட்சிகள் ஃபயர் விடும் அளவுக்கு தாறுமாறாக இருக்கின்றன. கோப்ராவாக நடித்த சியான் விக்ரமையே வைத்து இந்த காட்சியை பா. ரஞ்சித் வைத்திருப்பது தரமான சம்பவம். மாளவிகா மோகனனை காட்டும் அந்த ஃபிரேம் வித்தியாசமாக உள்ளது.

வில்லன் யாருடா: ஆனால், பசுபதியை தவிர்த்து ஆங்கிலேயர்களை காட்டும் போது வெயிட்டான வில்லன் போல யாரையும் காட்டவில்லை. 1.33 நிமிட டீசரில் பெரிதாக கதையை ரிவீல் செய்ய விரும்பாமல் இருந்திருக்கலாம் என்று நினைத்தாலும், தங்கலான் டீசர் கொடுத்த பில்டப்புக்கு சியான் விக்ரமை தவிர்த்து எதுவும் பெரிதாக கவரவில்லை என்று தான் தோன்றுகிறது. டிரெய்லரில் கதையை கொஞ்சம் சொன்னால் சிறப்பாக இருக்கும். ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை வெகுவாக ரசிகர்களை கவர்கிறது.

அட்டகாசமான இசை, வசனங்கள் இல்லாத டீசரில் ரஞ்சித்தின் சிக்னேச்சர் ஸ்டைல் ​​இருப்பது பல்வேறு பிரிவு மக்களின் வாழ்வாதாரத்தைக் காட்டுகிறது. டீஸர் வெளிப்படுத்தும் கொண்டாட்டம், ஆக்ஷன், அடக்குமுறை மற்றும் உணர்ச்சிகரமான அம்சங்கள் உள்ளன.

தங்கலனுக்கு ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்‌ஷன்ஸ் ஆதரவு அளிக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார், இது திரைப்படத் தயாரிப்பாளருடன் அவரது முதல் ஒத்துழைப்பைக் குறிக்கிறது. விக்ரமுடன் இணைந்து பணியாற்றும் ரஞ்சித்தின் முதல் முயற்சியும் இப்படம்தான். படத்தின் இணை எழுத்தாளராக தமிழ் பிரபாவும், முறையே எடிட்டிங் மற்றும் கலைத் துறையை செல்வா ஆர்.கே மற்றும் எஸ்.எஸ்.மூர்த்தி கையாள்கின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்