Thursday, May 30, 2024 5:28 pm

ஒன்றிய இணை அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்த கேரளா போலீஸ்!

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எர்ணாகுளம் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 பிரிவினரிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில், சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தியாவின் மிக முக்கிய மாநிலமான கேரளாவில் நேற்று முன்தினம் (அக் .29)  நடைபெற்ற மத வழிபாட்டில்  வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 12 பேர் பலியானார்கள், மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாகக் கேரள ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்த பதிவில், ” ஹமாஸ் விஷத்தையும் வெறுப்பையும் கேரளாவிற்குள் அனுமதித்த ஒரு முதல்வர் ,  இப்போது “கேரள அடையாளத்தைப் பாதுகாப்பதாக” பாசாங்கு செய்ய முயல்வதை விடக் கேலிக்கூத்து அல்லது அவநம்பிக்கை எதுவும் இல்லை. ஒரு மலையாளியாக, பினராயி விஜயனின் பயங்கரவாதம் மற்றும் வன்முறையை இயல்பாக்குவது கேரளாவின் அடையாளம் அல்ல என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அவரது அரசியலுக்காக, நமது இளைஞர்கள் ஹமாஸ் போன்ற தீமைகளால் தீவிரவாதிகளாக மாற அனுமதிக்க மாட்டோம்” என்று கூறிருந்தார்

ராஜீவ் சந்திர சேகரின் இந்த பதிவு 2 பிரிவினரிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கேரள போலீசார் கருதினர். இதையடுத்து, அவர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ராஜீவ் சந்திர சேகர் விசாரணைக்கு ஆஜராகுமாறு கேரள போலீசார் உத்தரவிட்டனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்