சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (அக் .31) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் கனமழைக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மழை பெய்யும்போது வெளியே செல்ல வேண்டாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். மழைநீர் தேங்கிய இடங்களில் செல்ல வேண்டாம் என்றனர்.
மேலும், இந்த மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலில் செல்ல வேண்டாம் என்று வானிலை மாயம் அறிவுறுத்தியுள்ளது.