முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் Speaking4india பாட்கேஸ்ட் மூலமாக இன்று (அக் .31) உரையாற்றினார். அதில், அவர், ” இந்தியா என்பது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு அழகிய மலர்கள் நிறைந்த அற்புதமான பூந்தோட்டம். அதைச் சிதைக்க பாஜக முயற்சிக்கிறது” என்றார்.
மேலும், அவர் ” முதலமைச்சராக மாநில உரிமை பற்றிப் பேசிய மோடி, பிரதமராகி மாநில உரிமைகளைப் பறிக்கிறார். மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. . இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் மதங்களைக் கொண்ட ஒரு நாடு. இந்த வேறுபாடுகளைப் பாதுகாக்கவும், அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் கூட்டாட்சி முறை அவசியம்” என ஆவேசமாகக் கூறினார்.
”பாஜக அரசு, மாநில உரிமைகளைப் பறிப்பதன் மூலம் கூட்டாட்சி முறையைச் சிதைக்க முயற்சிக்கிறது. இந்த முயற்சிகள் இந்தியாவின் ஜனநாயகத்தையே அச்சுறுத்தும். மாநில சுயாட்சி கொள்கை வெல்ல வேண்டுமென்றால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அவர் ” இந்த கூட்டணி ஆட்சியில், எந்த ஒரு கட்சியும் தனியாகப் பெரும்பான்மையைப் பெற முடியாது. இதனால், மாநிலங்களின் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்தியாவை INDIA கூட்டணிக்கு ஒப்படையுங்கள் என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த உரை மூலம், இந்தியாவின் கூட்டாட்சி முறையைப் பாதுகாக்கவும், அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் ஒரு முக்கியமான முயற்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.