Friday, December 8, 2023 3:14 pm

உலக கோப்பை தொடர்: இன்று இலங்கை – ஆப்கான் அணிகள் மோதல்!

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகக் கோப்பை தொடரில் இன்று (அக் .30) நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ளன. இலங்கை அணி, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. ஆப்கான் அணி, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்தப் போட்டி, புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் மதியம் 2 மணிக்குத் தொடங்குகிறது.  இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முன்னேறும். இந்தப் போட்டியில் இரு அணிகளுமே தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு விருந்து அளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து உள்ளனர் .

இலங்கை அணி, தற்போது கடைசி 2 போட்டிகளிலும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் வலிமை காட்டி வருகிறது. அதைப்போல், ஆப்கான் அணியின் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்