- Advertisement -
பெங்களூரு வீரபத்ரநகரில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ எவ்வாறு தொடங்கியது என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், பேருந்துகளில் மின்சாரக் கோளாறு காரணமாகத் தீப்பிடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதேசமயம், இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, ஆனால் பேருந்துகளுக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டதாகத் தகவல் வந்துள்ளது
- Advertisement -