Saturday, June 22, 2024 11:54 am

ரவுடி கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு நடத்திய வழக்கில் கைதான ரவுடி கருக்கா வினோத்தை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர்.

ஏனென்றால், ரவுடி கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், இன்று இந்த மனுவைக் குறித்த விசாரித்த நீதிபதி, ரவுடி கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

ரவுடி கருக்கா வினோத், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர். இவர் கடந்த அக் .25 ஆளுநர் மாளிகை அருகே பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதனைப் பற்ற வைத்து வீசியுள்ளார். இந்த சம்பவத்தில் ஆளுநர் மாளிகைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை .

ஆனாலும், உரிய நேரத்தில் காவலர்கள் தடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தற்போது ரவுடி கருக்கா வினோத்தின் மீது வெடிப்பொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரவுடி கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரித்த பின்னர், அவரைக் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு விசாரணை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்