கேரளாவில் நேற்று காலை நடைபெற்ற மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே அதிரவைத்தது. இந்நிலையில், நேற்றே இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் போலீசில் சரணடைந்த டொமினிக் மார்டினிடம் போலீசார் விசாரணை நடத்தினர். .
அதில், 3,000 ரூபாய் செலவில் குண்டு தயாரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். பட்டாசுக் கடையில் 50 வெடிகள் வாங்கி, யூடியூப் பார்த்து எலக்ட்ரிக் டெட்டனேடர்களை செய்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
மார்டினின் செல்போனில் இதற்கான சில வீடியோ ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். குண்டு வெடித்த மத வழிபாட்டுக் கூட்டத்தில் மார்டினின் மாமியாரும் கலந்துகொண்டுள்ளார். இது தெரிந்திருந்தும் தனது சதித்திட்டத்திலிருந்து அவர் பின்வாங்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளியைக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.