3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2589 மில்லியன் கன அடியாக உள்ளது. இதன் மூலம், ஏரியின் நீர் இருப்பு 78.7% ஆக உள்ளது. சென்னை குடிநீர்த் தேவைக்காக, வினாடிக்கு 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதைப்போல், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 579 மில்லியன் கன அடியாக உள்ளது. இதன் மூலம், ஏரியின் நீர் இருப்பு 53.7% ஆக உள்ளது. மேலும், இந்த 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 440 மில்லியன் கன அடியாக உள்ளது. இதன் மூலம், ஏரியின் நீர் இருப்பு 88% ஆக உள்ளது.
இந்த ஏரிகள் மூலம் சென்னைக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், சென்னை குடிநீர்த் தேவைக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.