தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர் ரவியை விமர்சித்தார். அதில், ” ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக, ராஜ்பவனிலிருந்து திட்டமிட்டுப் பொய் பரப்பப்படுகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும், அவர் ” தமிழக ஆளுநர் பாஜக்காரராக மாறியுள்ளார். ஆளுநர் மாளிகையும் பாஜக அலுவலகமாக மாறியுள்ளதுதான் வெட்கக் கேடு” எனக் கூறினார்.
” இந்த ராஜ்பவன் வெளியே உள்ள சாலையில்தான் அச்சம்பவம் நடந்துள்ளது என்பதை சிசிடிவி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது காவல்துறை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், அவர் ” தமிழ்நாடு புண்ணிய பூமி இங்கு ஆரியம், திராவிடம் என எதுவும் கிடையாது என்று திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ரவி பேசியிருந்தை குறிப்பிட்டு, இன்னாருக்கு இதுதான் எனச் சொல்வது ஆரியம். எல்லாருக்கும் எதுவும் உண்டு என்று சொல்வது திராவிடம். இந்த வித்தியாசத்தை ஆளுநர் ரவி புரிந்துகொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.