ஆந்திராவில் விஜயநகரம் அடுத்த கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 8 மணியளவில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். மேலும், இந்த ரயில் விபத்தில் தற்போது மீட்புப் பணிகள் நடந்து வருவதால் மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆந்திராவில் நேற்று இரவு நடந்த ரயில் கோர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயில்வே துறை, ஆந்திர அரசு மற்றும் ஒன்றிய அரசு ஆகியவை சற்றுமுன் நிவாரணம் அறிவித்துள்ளன. அதன்படி, ரயில்வே துறை சார்பாக, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ .10 லட்சம் நிவாரணம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ .50,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல், ஆந்திர அரசு சார்பாக, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ .10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்
மேலும், ஒன்றிய அரசு சார்பாக, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ . 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50,000 நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறியுள்ளது. இந்த நிவாரணங்கள் விரைவில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.