அஜித் குமார் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு செவ்வாய்க்கிழமை அன்று வெளிநாட்டில் தொடங்கியது. அறிக்கைகளின்படி, அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையே சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியம் தொடர்பாக நடந்து வரும் மோதலுடன், அஜர்பைஜானில் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு நடந்தது.
மூன்று மாதங்களுக்கு இடைவேளையின்றி தொடர்ந்து வேலை செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு ஒரு விரிவான படப்பிடிப்பிற்கு தயாராகி வருகின்றனர். படத்தின் முன்னணி பெண்மணியான த்ரிஷா, அஜர்பைஜான் கொடி பறக்கும் கட்டிடத்தின் படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார், அதனுடன், “உங்களுக்கு விடுமுறை தேவையில்லாத வேலையைப் பெறுங்கள்” என்ற தலைப்புடன். கூடுதலாக, அவர் தனது அன்பை வெளிப்படுத்த இதய ஈமோஜியுடன் கூடிய ரோஜாக்களின் பூங்கொத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அஜித் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘விடாமுயற்சி’ படம் துவங்கியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் ஷுட்டிங் எப்போது துவங்கும் என்பதற்காக ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்து வந்தனர். இதனையடுத்து ஒரு வழியாக அண்மையில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் துவங்கியது. இந்நிலையில் இப்படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
அஜித் நடிப்பில் கடைசியாக ‘துணிவு’ படம் ரிலீசாகி இருந்தது. எச். வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்து வெளியானது இப்படம். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதனால் ரசிகர்கள் குஷியானார்கள்.
ஆனாலும் இப்படம் துவங்குவது தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இதனையடுத்து இயக்குனர் மாற்றப்பட்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படம் உருவாவதாக கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியானது. அதோடு இப்படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கடுமையாக அப்செட் ஆனார்கள்.
இந்நிலையில் அண்மையில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் துவங்கியது. ஆனால் இதுக்குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிடவில்லை. தற்போது அங்கு படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இந்த ஷுட்டிங்கில் அஜித், திரிஷா, பிக்பாஸ் பிரபலமான ஆரவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது. அதன்படி ‘விடாமுயற்சி’ படத்தில் ஒரு பிளாஸ்பேக் காட்சி உள்ளதாம். இதில் மிகவும் இளமையாக தெரிவதற்காக உடல் எடையை குறைக்கும் வேலையில் திரிஷா இறங்கியுள்ளாராம். ஏற்கனவே ஒல்லியாக இருக்கும் திரிஷா, மேலும் உடல் எடையை குறைப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் ‘லியோ’ படத்தினை தொடர்ந்து தற்போது அஜித்துடனும் திரிஷா இணைந்து நடிக்கவுள்ளது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ‘விடாமுயற்சி’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ‘மங்காத்தா’ படத்தினை தொடர்ந்து இந்த காம்போ சேர உள்ளது. மகிழ் திருமேனியின் முந்தைய படங்களான தடையற தாக்க, தடம், மீகாமன், தடம், கலகத்தலைவன் போன்று விடாமுயற்சியும் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை விட ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால்,விடாமுயற்சி படத்தில் அருண் விஜய் மற்றும் அருள்நிதி வில்லன்களாக நடிக்க கமிட்டாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷனின் இறுதிக்கட்டப் பணிகளை மேற்பார்வையிடுகிறது மற்றும் தயாரிப்புக் குழு சமீபத்தில் அபுதாபிக்கு லொகேஷன் ஸ்கவுட்டிங் பயணத்தை நடத்தியது. அஜர்பைஜானில் படப்பிடிப்பைத் தொடர்ந்து, கூடுதல் ஷெட்யூல்களுக்காக படக்குழுவினர் பல்வேறு இடங்களுக்குச் செல்வார்கள்.
இந்த ஆண்டு ரஜினியின் ஜெயிலர் மற்றும் ஷாருக்கானின் ஜவான் போன்ற முக்கிய படங்களில் பணிபுரிந்த அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், விடாமுயர்ச்சி படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.