- Advertisement -
கேரளாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், நன்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்த பியூன் வேலைக்கு விளம்பரம் செய்தது. மாதம் 23,000 ஊதியம் கொண்ட இந்த வேலைக்கு 7ம் வகுப்பு மட்டுமே தகுதி என்று விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்த வேலைக்கு, பல்வேறு கல்வித் தகுதிகள் கொண்டவர்கள் விண்ணப்பித்தனர். அதிலும், குறிப்பாகப் பொறியாளர்கள், பி.டெக் பட்டதாரிகள், பட்டதாரி மாணவர்கள் எனப் பலர் இந்த வேலைக்கு நேர்காணலுக்கு வந்தனர்.
இந்த சம்பவம், இந்தியாவின் வேலைவாய்ப்பு சூழலைப் பற்றிய ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது. இதற்குப் பல காரணங்கள் எழுப்பப்படுகிறது. அதில், வேலைவாய்ப்புகள் குறைவு, குறைந்த ஊதியம் போன்ற காரணங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர்.
- Advertisement -