தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கடந்த அக் .23 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (28-10-2023) கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டம். தருவைகுளம் மீன் இறங்குதளத்திலிருந்து அக் .1 ஆம் தேதியன்று விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் அக் .23 ஆம் தேதியில் தினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் ” என்றார்.
மேலும், அவர் .மந்த கடிதத்தில், ” உரியத் தூதரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட வேண்டுமென்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்கள்”.