50 ஓவர் உலகக் கோப்பை தொடரில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (அக் .27) நடைபெற்ற பாகிஸ்தான்-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில், 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா அணி.
இப்போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 270 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து, ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது.
தென்னாப்பிரிக்க அணிக்காக ஐடென் மார்க்ரம் 91 ரன்கள், டேவிட் மில்லர் 29 ரன்கள், தெம்பா 28 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 6 போட்டியில் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா. பாகிஸ்தான் அணி 2 வெற்றிகள், 4 தோல்விகளுடன் 6வது இடத்தில் நீடிக்கிறது.