தமிழ்நாட்டில், தேவர் ஜெயந்தி விழா ஒவ்வொரு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் வரும் அக் .30ஆம் தேதியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்துவார்கள்.
இந்தநிலையில், தேவர் நினைவிடத்தில் மக்கள் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்தும் வகையில், 2 மணி மண்டபங்கள் கட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, இந்த தேவர் நினைவிட முகப்பில் மக்கள் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்தும் வகையில் ரூ .1.43 கோடியில் ஒரு மணிமண்டபம் கட்டப்படும் எனக் கூறினார்.
மேலும், அவர் ” இங்கு மிக முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் 2.54 லட்சத்தில் மற்றொரு மண்டபம் கட்டப்படும் என்றார். ஏனென்றால், இந்த தேவர் ஜெயந்தி விழாவில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், வெயில், மழையிலிருந்து பாதுகாத்திடவும் மண்டபம் கட்டித்தர வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.