- Advertisement -
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில், இந்தியா – இலங்கை அணிகள் மோத உள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (அக் .26) பகல் 12 மணிக்கு இணையத்தில் தொடங்கியுள்ளது.
வரும் நவம்பர் 02ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (27 அக்டோபர் 2023) பகல் 12 மணிக்கு இணையத்தில் தொடங்கியது .
டிக்கெட்களை வாங்க விரும்பும் ரசிகர்கள் BCCI-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.bcci.tv) அல்லது Paytm மூலம் டிக்கெட்களை வாங்கலாம். டிக்கெட் விலைகள் ரூ.500 முதல் ரூ.25,000 வரை இருக்கும்.
இந்த போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாகும். இரு அணிகளும் தங்கள் திறமையை வெளிப்படுத்தத் தயாராக உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குப் பஞ்சம் இருக்காது.
- Advertisement -