தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநர் மாளிகை வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
அதில், “ஆளுநர் மாளிகை வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டவர் உடனே கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு உள்ளது. சாலையில் நடந்து சென்ற அந்த நபர் அதை வீசியுள்ளார், இந்த சம்பவத்தில் எந்த உளவுத்துறை தோல்வியும் இல்லை. இதை வைத்து பாஜக அரசியல் செய்தாலும், அது தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது” என்று கூறினார்.
மேலும், அவர் “ஆளுநர் மாளிகைக்கு எதிராக நடத்தப்படும் எந்த சம்பவத்திற்கும், தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். தமிழ்நாட்டில் அமைதி காத்து, எந்த சட்டவிரோத செயல்களுக்கும் அனுமதிக்க மாட்டோம். இந்த சம்பவம் தொடர்பாக, தமிழக அரசு விசாரணை நடத்தி வருகிறது.” என்றார்.