WONDERLAவின் 5வது பொழுதுபோக்கு பூங்கா, சென்னைக்கு அருகேயுள்ள திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. சுமார் 400 கோடி செலவில் அமையவுள்ள இந்த பூங்காவுக்குத் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இன்று பூமி பூஜை நடைபெற்றுள்ளது.
இந்த பூங்காவில், பல்வேறு வகையான விளையாட்டுகள், திரைப்படங்கள், உணவகங்கள் மற்றும் கடைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பூங்கா 2025ம் ஆண்டுக்குள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத்தில் ஏற்கனவே WONDERLA பூங்காக்கள் இயங்கி வருகின்றன. ஒடிசாவில் புதிய பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தற்போது திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் WONDERLA பூங்கா அமைவது, தமிழ்நாட்டுக்கு பெரும் வரப்பிரசாதம் என்று கூறலாம். இந்த பூங்கா, தமிழ்நாட்டிற்கு சுற்றுலாத்துறைக்கு மேலும் வளர்ச்சி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.