Wednesday, December 6, 2023 6:13 am

லியோ படத்தின் ரிசல்ட் ! அதிர்ச்சியில் தளபதி விஜய் !பதட்டம் அடையும் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விஜய்யின் நடிப்பை வெளிப்படுத்தும் கேரக்டரில் ஜொலித்திருப்பது ‘லியோ’வுக்கு வலு சேர்த்துள்ளது, அதே சமயம் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இரண்டாம் பாதி லோகேஷ் கனகராஜின் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மேத்யூ தாமஸ் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் அந்தந்த பாத்திரங்களுக்கு சிறந்ததை வழங்கியுள்ளனர், அதே நேரத்தில் அனிருத் ரவிச்சந்தரின் பின்னணி இசை பெரிய திரைகளில் தீயை ஏற்றியது.

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் அலைமோதிக் கொண்டிருக்கும் நிலையில், படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே வசூல் சாதனையைப் படைத்து விட்டதாக அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. லியோ திரைப்படத்தைத் தயாரித்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆனால், அதன் பிறகு, படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்தத் தகவலையும் வெளியிடாமல் வைத்திருக்கிறது. மற்றொரு பக்கம் லியோ படக்குழுவினரும் வாயைத் திறக்காமல் கப்சிப் என்று அமைதியாக உள்ளனர். இதனால் இப்போது லியோ படத்தின் வசூல் குறித்து இணையத்தில் பலவிதமாக தியரிகள் உருட்டப்படுகின்றன.கோடிக்கணக்கான ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு, லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து மீண்டும் இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் மற்றும் நடிகர் விஜய் காம்போவில் உருவாகியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லியோ படத்தில் LCU இருக்குமா இல்லையா என்ற ஹைப்பிலேயே ரசிகர்கள் பலரும் படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில், லியோ படத்தை தியேட்டர்களில் பார்த்த பெரும்பாலானோர் முதல் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், இரண்டாம் பாதியில் சண்டைக் காட்சிகளே அதிகம் இருப்பதாகவும், அதனால் படம் இழுவையாய் இருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

அதேசமயம், LCU வை எதிர்பார்த்து சென்ற ரசிகர்கள், லியோ படத்தில் LCU திணிக்கப்பட்டிருப்பதாகவும், கதையோடு ஒன்றவில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, லியோ படம் ‘ஆஹா ஓஹோ’ என்றளவிற்கு இல்லையென்றாலும், ‘ஒரு டைம் பார்க்கலாம்’ என்றவிளவிற்கு இருப்பதாகத்தான் பெருவாரியான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல், லியோ ரிலீஸ் ஆன நாளில் இருந்து சோஷியல் மீடியாக்களில் விஜயை கலாய்த்தும், படத்தில் உள்ள பிழைகளை ட்ரோல் செய்தும் மீம்ஸ்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் விஜய் ரசிகர்கள் கடுப்பில் இருந்து வருகின்றனர். இப்படி சோஷியல் மீடியா, ஆடியன்ஸ் என அனைத்துத் தரப்பினரிடமும் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் லியோ படம் எப்படி வசூல் சாதனை செய்ய முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், தானாக வந்து முதல் நாள் வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம், இப்போது ஏன் அடுத்தடுத்த நாளில் லியோ செய்த வசூல் குறித்து வாயைத் திறக்காமல் உள்ளது என்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் இணையத்தில் விவாதித்து வருகின்றனர். குறிப்பாக, ஷாருக்கான், ரஜினி ரசிகர்கள், லியோ படத்தில் வசூல் அறிவிப்பு குறித்து கலாய்த்து வருகின்றனர். அதாவது, இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் படம் 10 ஆயிரம் ஸ்க்ரீன்களில் வெளியானது.

அந்த படம் பண்ணாத வசூலையா, அதை விட குறைவான ஸ்க்ரீன்களில் வெளியாகிய லியோ வசூல் செய்து விட்டது என்று கேள்வி எழுப்புகின்றனர். அதுமட்டுமில்லாமல், லியோ படத்திற்கு முதல் நாள் புக்கிங்கை மட்டுமே முதலில் பல திரையரங்குகளும் ஓபன் செய்திருந்தனர். ஒட்டுமொத்த ரசிகர்களும் படத்தை பார்க்க டிக்கெட்டுகளை வாங்க வைத்து பின்னர் தான் அடுத்தடுத்த நாட்களுக்கான டிக்கெட் புக்கிங்கையே ஓபன் செய்திருந்தனர் என்றும் அதன் காரணமாகத்தான் முதல் நாள் அதிக வசூல் வந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதெல்லாத்தையும் விட, LCU எதிர்பார்ப்பினாலேயே படம் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்திருக்கும் என்றாலும், 2 வது நாளான வெள்ளிக்கிழமை லியோ படம் எதிர்பார்த்த வசூலை கொடுத்திருக்காது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இரண்டாவது நாளில் நூறு கோடி வசூலைக் குவித்திருந்தால், தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் என்றும், ஆனால், வெறும் 66 கோடி மட்டுமே வசூல் செய்ததால், வெளியே சொல்ல முடியாமல் படக் குழுவினரும், தயாரிப்பு நிறுவனமும் திக்குமுக்காடிப் போயுள்ளனர் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இப்படி லியோ படத்தின் வசூல் குறித்து ஆளாளுக்கு ஒன்று பேசி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் சனி மற்றும் ஞாயிறு வசூலுடன் சேர்த்து திங்கட்கிழமை ஒட்டுமொத்தமாக 300 கோடி வசூலை கடந்தது என முதல் வார அறிவிப்பை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு ரஜினி மற்றும் ஷாருக்கான் ரசிகர்கள் லியோ 2ம் வாரத்தில் ஜெயிலர் போலவோ, ஜவான் மற்றும் பதான் போலவோ ஓட வாய்ப்பில்லை என்று காட்டமாக தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் இணையத்தில் அவர்களது தரப்பைக் கூறினாலும், கலவையான விமர்சனக்ளைப் பெற்று வரும் லியோ, என்ன மாதிரியான வரவேற்பை இந்த விடுமுறை நாட்களில் பெறுகிறது என்பதை பொறுத்துத் தான் வசூல் நிலவரம் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஆக்‌ஷன் நிறைந்த ‘லியோ’ படத்தில் விஜய் இரண்டு வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார், மேலும் இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், அர்ஜுன் சர்ஜா, பிரியா ஆனந்த், மிஷ்கின், சாண்டி, மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். மற்றவர்கள் முக்கிய வேடங்களில். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், மேலும் அவரது கடுமையான பின்னணி இசை அதிரடி காட்சிகளையும் உயர்த்தியது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்