Sunday, December 3, 2023 1:04 pm

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரிகளின் நீர் இருப்பு குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

அதன்படி, 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2546 மில்லியன் கன அடியாக உள்ளது. இது ஏரியின் முழு கொள்ளளவின் 77.3% ஆகும். சென்னை குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதைப்போல், சோழவரம் ஏரி: 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 564 மில்லியன் கன அடியாக உள்ளது. இது ஏரியின் முழு கொள்ளளவின் 52.4% ஆகும்.

மேலும், கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரி: 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 450 மில்லியன் கன அடியாக உள்ளது. இது ஏரியின் முழு கொள்ளளவின் 90% ஆகும். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, இந்த ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதனால், ஏரிகளின் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது. புழல் ஏரியின் நீர் இருப்பு 82.33%-ஐ நெருங்கியதால், ஏரியின் பாதுகாப்பு கருதி, முதற்கட்டமாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழை காரணமாக ஏரிக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், உபரிநீர் திறப்பும் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்