Wednesday, December 6, 2023 12:50 pm

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா கேட்ட கேள்வியால் பதறிய மாலினி! ஈஸ்வரியால் மாறிப்போன கதை !பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாக்யலட்சுமியின் சமீபத்திய எபிசோடில், கோபியின் இருப்பு ஈஸ்வரியின் மனதில் தொடர்ந்து கனமாக இருந்தது. ஏதோ தவறு நடந்துவிட்டது என்ற உணர்வை அவளால் அசைக்க முடியவில்லை. கோபியை நேருக்கு நேர் சந்தித்து அவன் திரும்புவதைப் பற்றி நேரடியாகக் கேட்க முடிவு செய்தாள்.கோபி தனது தாயை சமாதானப்படுத்தி, “உங்கள் கவலையை நான் புரிந்துகொள்கிறேன். உறுதியுடன் இருங்கள், நான் எந்த பிரச்சனையையும் கிளப்ப வரவில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் அக்டோபர் 25ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் மாலினியின் நடவடிக்கைகள் குறித்து பாக்கியாவிற்கு சந்தேகம் வந்து செழியனிடம் கேள்வி கேட்கிறார்.

அதே நேரத்தில் செழியன் தனக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று ஜெனி முன்பு மாலினி சீன் போடுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம். இந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் மாலினியிடம் செழியன் போன் பண்ணி பயந்தபடியே பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அங்கு பாக்யா வந்ததும் போனை உடனடியாக கட் பண்ணி விட பாக்கியாவிற்கு சந்தேகம் வந்து விசாரிக்க அப்போது செழியன் ஆபீஸ் விஷயமா பேசினேன் என்று சமாளித்துக் கொண்டிருக்க அதற்கு பாக்கியா மாலினி தானே? ஏதாச்சும் சொல்லி உன்னை மிரட்டுகிறாளா? எதுக்காக நீ அவகிட்ட பயப்படுற என்று விசாரிக்கிறார்.

அதற்கு அப்படியெல்லாம் இல்லை கொஞ்சம் வேலையை நான் மாலினிக்கு இன்னும் முடித்துக் கொடுக்கவில்லை. அதனால் தான் என்று சமாளித்துக் கொண்டு அங்கிருந்து செழியன் கிளம்பி விடுகிறார். அதை தொடர்ந்து கோபி வாக்கிங் போய்க் கொண்டிருக்கும் போது எல்லாரும் ஹார்ட் அட்டாக் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதை கேட்டு கோபி கடுப்பாகி இல்லை என்று பேசிக்கொண்டே வர அந்த வழியாக பாக்யா வரும்போது ஒருவர் சாருக்கு ஹார்ட் அட்டாக் நீங்க கேட்க மாட்டீர்களா? என்று கேட்க அதற்கு நான் என்ன செய்ய முடியும் நான் என்ன டாக்டரா என்று பாக்கியா பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி போகிறார். இதனால் கோபி கோபத்தோடு புலம்பிக் கொண்டே வர அந்த நேரத்தில் அங்கு கிரெடிட் கார்டு பணம் கேட்டு பேங்கில் இருந்து சிலர் வந்து கோபி இடம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது கோபி ஒரு மாதம் டைம் கேட்டு அவர்களிடம் பேசிக்கொண்டு அவர்களை சமாளித்து அனுப்பவும் அந்த நேரத்தில் அங்கு ராதிகா நிற்கிறார். ராதிகாவை பார்த்ததும் ஹாய் பேபி எப்படி இருக்க என்று கோபி போய் சமாதானப்படுத்தி பேச முயற்சிக்க அந்த நேரத்தில் அங்கு வரும் ஈஸ்வரி கோபி இங்கே வா என்று மிரட்டி கூப்பிட்டுக்கொண்டு வீட்டிற்கு போகிறார்.

இதனால் ராதிகா மேலும் கோபப்படுகிறார். அதை தொடர்ந்து வீட்டிற்கு மாலினி வர அப்போது செழியன் வீட்டில் இல்லாததால் மாலினி செழியன் எங்கே என்று ஜெனியிடம் விசாரிக்க அதற்கு ஜெனி முக்கியமான வேலை ஏதாவது இருக்கும் வெளியே போய் இருப்பான் என்று சொல்ல அதற்கு புருஷன் எங்க போயிருக்கார் என்று பொண்டாட்டிக்கு தெரிய வேண்டாமா என்று மாலினி கேள்வி கேட்டு சரி போன் பண்ணி பாருங்க என்று சொல்ல அவருக்கு ஜெனி போன் பண்ணி பார்க்கும்போது செழியன் போனை எடுக்கவில்லை.

அதைத்தொடர்ந்து மாலினி இப்போ நான் போன் பண்ணா பத்து நிமிஷத்துல ஓடி வருவாரு பாருங்க என்று சொல்லிய படி போனை எடுத்து செழியனுக்கு கூப்பிட செழியன் சொன்னபடியே ஓடியே வீட்டுக்கு வருகிறார். அதை பார்த்து எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். அதற்கு ஈஸ்வரி வேலைக்கு ஒருத்தவங்க கிட்ட இருக்கும்போது அவங்க கூப்பிட்டா இப்படித்தானே வரணும் வேற இதுல ஒன்னும் அதிசயமா இல்லையே என்று சொன்னாலும் ஜெனிக்கு லேசாக கோபம் வருகிறது.

அதை தொடர்ந்து அங்கிருந்து ஜெனி கிளம்பி போக அப்போது மாலினி குழந்தையை நான் வைத்துக் கொள்கிறேன் என்று வாங்கி இருக்கிறார். குழந்தையை கொடுத்துவிட்டு ஜெனி மாடிக்கு போய்விட்டு சிறிது நேரம் கழித்து கீழே வந்து குழந்தை எங்கே என்று மாலினியிடம் கேட்க மாலினி குழந்தையை ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு செல்வி அக்கா வாங்கிட்டு போயிட்டாங்க என்று போய் சொல்ல செல்வி சத்தியமா என்கிட்ட கொடுக்கல என்று சொல்ல வீட்டில் எல்லோரும் குழந்தையை காணவில்லை என்று தேடிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.இந்த அனுபவத்தின் மூலம், தொடர்பு, புரிதல் மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் மதிப்பை அனைவரும் கற்றுக்கொண்டனர். கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் துணை நிற்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர்கள் பார்த்தார்கள். கோபியின் வருகை வீட்டிற்குள் மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், வாழ்க்கை மற்றும் குடும்பத்தைப் பற்றிய மதிப்புமிக்க பாடங்களையும் அனைவருக்கும் கற்றுக் கொடுத்தது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்