அறிமுக இயக்குனர் பரி கே விஜய் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடிக்கும் ‘ஆலம்பனா’ படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தின் டீசர் முன்னதாக 2021 இல் வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பாளர்கள் இப்போது படம் 2023 டிசம்பரில் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் முனிஷ்காந்த் ஜெனியாகவும், பார்வதி நாயர் வைபவ் ஜோடியாகவும் நடிக்கும் ஒரு கற்பனை காமெடி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. திண்டுக்கல் ஐ லியோனி, ரோபோ ஷங்கர், காளி வெங்கட், முரளி ஷர்மா மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் வேடிக்கை நிறைந்த நகைச்சுவை பொழுதுபோக்கின் துணை நடிகர்களாக உள்ளனர்.
Magical tales are about to come to life✨
Experience the fun and adventures of #Aalambana, coming to theatres this December🧞♂@actor_vaibhav @paro_nair @dir_parikvijay @hiphoptamizha @koustubhent @vinothrsamy @PeterHeinOffl @Sanlokesh @artdirectorgopi @Kabirduhansingh… pic.twitter.com/Jaho8kiPtG
— KJR Studios (@kjr_studios) October 20, 2023
கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஒஸ்துப் என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க, வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.