Sunday, December 3, 2023 12:07 pm

எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் போட்டுத்தள்ள கதிர் செய்த காரீயம் ! குடும்பத்தை விட்டு வெளியேறிய ஈஸ்வரி

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எதிர்நீச்சல் ஆதிரை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் விரக்தியடைந்ததாகவும் உணர்கிறாள், அதே சமயம் தர்ஷன் கட்டுப்பாட்டை செலுத்த முயற்சித்து மற்றவர்களை அச்சுறுத்துகிறான். இதற்கிடையில், ஞானமும் கரிகாலனும் அவரை ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு வெளியே அழைத்துச் செல்ல கதிர் அமைதியாக இருக்கிறார். ஜான்சி ராணி அவர்களின் விவாதத்தை ஒட்டு கேட்க திட்டமிட்டுள்ளார்.

அதில் எல்லோரும் கோவிலுக்கு கிளம்பி போகும் நேரத்தில் அவர்களுடன் இருந்து ஈஸ்வரி மட்டும் தனியாக கிளம்பி போகிறார்.அதைத்தொடர்ந்து வளவன் கரிகாலன் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி கொண்டிருக்க அப்போது கரிகாலன் அலறிக் கொண்டிருக்கும் போது அங்கு கதிர் வந்து காப்பாற்றுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தத்திடம் தங்களை நம்பிக்கொண்டிருந்த ஜீவானந்தத்திடம் அவருடைய மனைவியை குணசேகரனும், அவருடைய தம்பியும் கொலை செய்ததை பற்றி சொல்லாதது எவ்வளவு பெரிய தப்பு என்று புரிந்து கொண்ட ஈஸ்வரி கதறி அழுதார்.காலையில் போன ஈஸ்வரி எங்கேயும் காணவில்லையே என்று தேடிக் கொண்டிருந்த வீட்டு மருமகள்களுக்கு வீட்டிற்கு வந்ததும் ஈஸ்வரி சொல்லி அழுததை கேட்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. அனைவரும் ஈஸ்வரிக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் வீட்டு குழந்தைகளிடம் விசாலாச்சி எப்பவும் போல பழைய பஞ்சாங்கத்தை பாட, அதற்கு தர்ஷினி, தர்ஷன், ஐஸ்வர்யா, தாரா என எல்லோருமே பதிலடி கொடுத்திருந்தனர்.

அதற்கு விசாலாட்சியும், கதிரும் பிள்ளைகளை சரியாக வளர்க்காமல் பேச வச்சு வேடிக்கை பார்க்குறாளுங்க என்று வீட்டு மருமகள்களை திட்டி இருந்தனர். அதைத் தொடர்ந்து கதிரும் கரிகாலனும் ஊருக்கு திருவிழா ஃபங்ஷனுக்கு போவதாக விசாலாட்சி இடம் சொல்லி கிளம்பி இருந்தனர். அப்போது ஊருக்கு போவதற்காக கிளம்பி இருந்த நந்தினி கரிகாலன் ஏதோ ஏற்பாடு செய்யப் போறோம் என்று சொன்னானே அது திருவிழா ஏற்பாடு தானா? இல்ல வேறு எதுவும் ஏற்பாடா? என்று கேட்க அதை கேட்டு கதிர் கோபத்தில் முறைத்தப்பட்டபடி நின்றார்.அப்படியாக நேற்றைய எபிசோடு முடிவடைந்தது. அதை தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில் எல்லோரும் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருக்கின்றனர். அப்போது ஜான்சி ராணி விசாலாட்சி இடம் உங்க சின்ன மகன் சத்தியை உங்க வீட்டு மருமகள்கள் வேலைக்காரனா தான் யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்ப கூட எல்லாருக்கும் டிரைவரா தான் கூட்டிட்டு போறாங்க என்று சிரிக்க அதை கேட்டு சக்தி கோபமாக நிற்கிறார்.

அதைத்தொடர்ந்து கரிகாலன் தலையில் வளவன் துப்பாக்கியை வைத்து கொண்டு நிற்கிறார். அப்போது கரிகாலன் யோவ்.. இதை கேட்டதற்காக இப்படி பண்ணுறா? எனக்கு ஃபர்ஸ்ட் நைட் கூட ஆகல என்ன சுட்டுராத என்று கத்தி கதறுகிறார். அப்போது ஓடி வந்து கதிர் வளவனிடம் இருந்து கரிகாலனை காப்பாற்றுகிறார். அதை தொடர்ந்து காரில் வீட்டு மருமகள்கள் எல்லோரும் போய்க்கொண்டிருக்கும் போது ஈஸ்வரி மட்டும் அவர்களிடம் இருந்து கிளம்பி தனியாக போகிறார்.நந்தினியும் ஜனனியும் எங்கே போறீங்க என்று கேட்க ஈஸ்வரி ரகசியமாக பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. ஏற்கனவே நேற்றைய எபிசோடில் ஜீவானந்தம் தன்னுடைய மகளிடம் சொல்லி விட்டு தான் ஒரு வாரம் கழித்து வருவதாக கூறிக்கொண்டு கிளம்பி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்திக்க போகிறாரா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று இன்றைய எபிசோடில் பார்ப்போம்.

அதைத்தொடர்ந்து ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் வேலராமமூர்த்தி அறிமுகம் ஆகி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் சொந்த பெயர்களை மறந்து அவர்கள் நடித்துவரும் கேரக்டர்கள்தான் ரசிகர்களின் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே ஒரு சில நடிகர்கள் சிலரை வெள்ளி திரையில் நடித்து பிரபலமாகி இருந்தாலும் தற்போது இந்த சீரியலில் வரும் பெயரின் படித்தான் எல்லோரும் அவர்களை அழைத்து வருகின்றனர்.

அந்த வகையில் மாரிமுத்துவின் மரணத்திற்கு பிறகு எதிர்நீச்சல் சீரியலில் கதை வேகமாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதில் இதுவரைக்கும் இல்லாத வகையில் புதியதாக ஜனனியின் பெரியப்பா பையன் மற்றும் அவருடைய குடும்பம் என புதியதாக கதை நகர்ந்து வருகிறது. அதில் குணசேகரனுக்கு அடுத்தபடியாக கிருஷ்ணா என்ற கிருஷ்ண மெய்யப்பன் கேரக்டரில் ஆர்.ஜே நெலு அறிமுகமாகி இருக்கிறார்.ஆர் ஜே நெலு இலங்கையை சேர்ந்தவர். அங்கு ஒரு சில திரைப்படங்களை நடித்தும் இயக்கியும் இருக்கும் நிலையில் அங்கு பிரபலமாக இருக்கும் சக்தி டிவியில் பணி புரிந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இப்போது முதல் முறையாக சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் அறிமுகம் ஆகி இருக்கும் நிலையில் தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் பிரபலம் அடைந்திருக்கிறார். இவர் நடித்த எபிசோடுகள் இரண்டு நாள் மட்டும் தான் ஒளிபரப்பாகி இருக்கிறது.

இனி குணசேகரனின் கோவில் திருவிழா நடந்து முடிந்த பிறகு ஜனனிக்கு பிரச்சனையாக கிருஷ்ணா கேரக்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவிற்கு முக்கியத்துவமான கேரக்டரில் ஆர் ஜே நெலு நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று டைரக்டர் வசந்த பாலனை சந்தித்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் அடுத்து உங்களுடைய முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இந்த அத்தியாயம் குடும்ப விசுவாசம் மற்றும் ஒருவரின் செயல்களின் விளைவுகள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. இது ஒரு குடும்ப அலகுக்குள் தொடர்பு மற்றும் புரிதலின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. கதாப்பாத்திரங்கள் தங்கள் உணர்ச்சிகளுடன் பிடுங்கிக்கொண்டு, சூழ்நிலையுடன் சமரசம் செய்வதற்கான வழிகளைத் தேடுகிறார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்