நடிகர் விஜய்யின் ஆக்ஷன் திரில்லர் படமான லியோ ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் கூற்றுப்படி, படம் அதன் முதல் நாளில் (வியாழக்கிழமை) ரூ 148.5 கோடி உலகளாவிய வசூலைக் குவித்தது. இந்தியாவில் சுமார் ரூ.64.80 கோடியை ஈட்டியுள்ளது. இருப்பினும், அதன் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை, படத்தின் வசூலில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான “லியோ” படத்திற்கு சூட்டிங் தொடங்கியதில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்த நிலையில் ஒரு வழியாக அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு படத்தை பார்த்தனர்.
ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடுகிறது காரணம் படத்தின் கதை ரொம்ப பழசு. மேலும் விஜய்யை தவிர மற்றவர்கள் சொல்லிக் கொள்ளும்படி அந்த அளவிற்கு சிறப்பாக நடிக்கவில்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. சினிமா விமர்சகர்கள் கூட தொடர்ந்து லியோ படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.லியோ படம் இதுவரை வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை முதல் இரண்டு நாட்களில் மட்டுமே 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது வருகின்ற நாட்களிலும் வசூல் அள்ளும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீசை ராஜேந்திரன் லியோ படம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
லியோ ரிலீஸுக்கு முன்பே நிச்சயம் 1000 கோடி வசூல் செய்ய வாய்ப்பே இல்லை அப்படி செய்தால் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என பேசியிருந்த நிலையில் தற்போ பேட்டிகளும் கொடுத்து வருகிறார். லியோ படம் பார்க்கப் போனப்ப தளபதி ரசிகர்கள் பலரும் என்ன பார்த்து ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி வசூல் – ன்னு சொன்னாங்க அவங்க படத்த பாத்துட்டு வரும்போது சைலன்ட் ஆயிட்டாங்க என கூறினார்.மீசை ராஜேந்திரன் லியோ படத்தை பார்த்துவிட்டு LCU படம் இல்லைங்க சரியான குப்பை படம் அதை பார்த்துவிட்டு ICU -க்கு போகிற நிலைக்கு ஆளாகி விட்டேன் கண்டிப்பா ஜெயிலர் படத்தை முறியடிக்காது படம் பிளாப் தான் என அந்த பேட்டியில் மீசை ராஜேந்திரன் பேசி இருந்தார். ஜெயிலர் 600 வசூலை முந்தினால் மீசையை எடுக்குறேன் என்றார். அப்படியே அந்தர் பல்டி அடித்து
திடீரென லியோ ரஜினியின் 2.O (800 கோடி) வசூலை முந்திவிட்டது என விஜய் வந்து சொன்னால் என்னுடைய மீசையை எடுக்கிறேன் என அவர் பேசி உள்ளார். இப்படி அவர் மாத்தி மாத்தி பேசி வருவதை பார்த்து தளபதி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஆக்ஷன் நிறைந்த ‘லியோ’ படத்தில் விஜய் இரண்டு வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார், அதே நேரத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜுன் சர்ஜா, பிரியா ஆனந்த், மிஷ்கின், சாண்டி, மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். மற்றவர்கள் முக்கிய வேடங்களில். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், மேலும் அவரது கடுமையான பின்னணி இசை அதிரடி காட்சிகளையும் உயர்த்தியது.