புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த 10ம் தேதி பிரியங்கா பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதற்கு முன்பதாகவே, அவரை பதவி நீக்கம் செய்த கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமி துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பி வைத்ததாகச் சபாநாயகர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.
சந்திர பிரியங்கா தனது பதவியை விட்டுச் செல்லும் முன் அவரது கடிதத்தில், “ஜாதி, பாலின ரீதியில் நான் தாக்குதலுக்கு உள்ளானேன்” என்று குறிப்பிட்ட கருத்து கடும் விவாதத்தைக் கிளப்பியது. ஆனால், புதுச்சேரி அமைச்சரவையிலிருந்து பிரியங்கா நீக்கப்பட்டதற்கு, அவர் பணியில் சரியாகச் செயல்படாததே காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரியங்காவைப் பதவி நீக்கம் செய்ய, முதலமைச்சர் ரங்கசாமி துணை நிலை ஆளுநர் தமிழிசைக்குக் கடிதத்தை அனுப்பி வைத்தார். இந்த கடிதத்தை, குடியரசுத் தலைவர் ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில், பிரியங்காவைப் பதவி நீக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
பிரியங்காவின் பதவி நீக்கம், புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.