Tuesday, June 25, 2024 7:48 am

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 வில் யார் யார் நடிக்க உள்ளார்கள் தெரியுமா ? முழு லிஸ்ட் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல தொலைக்காட்சித் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் சிறப்புக் கிளைமாக்ஸுடன் தனது பயணத்தை விரைவில் முடிக்கவுள்ளது. ஏப்ரல் 2022 இல் திரையிடப்பட்ட இந்த நிகழ்ச்சி 1430 எபிசோட்களுக்கு மேல் ஒளிபரப்பப்பட்ட பிறகு முடிவடைகிறது.
கடந்த சில மாதங்களாக, ஸ்டாலின் முத்து, சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேம ராஜ் சதீஷ், குமரன் தங்கராஜன் மற்றும் லாவண்யா ஆகிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.ஏர்-ஆஃப் காரணமாக, ஷோமேக்கர்கள் விரைவில் எபிசோடுடன் ஒரு சிறப்பு க்ளைமாக்ஸை நடத்த முடிவு செய்தனர்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ளது.

அண்ணன் -தம்பிகளின் பாசத்தை சொல்லும் இந்த சீரியலில் குடும்ப உறவுகளின் மகத்துவமும் சிறப்பாக எடுத்துக் காட்டி வருகின்றது.இதனை தொடர்ந்து இதே போல் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் நிறைவடைந்து அதன் இரண்டாம் பாகம் துவங்கவுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 5 வருடங்களாக வெற்றிக்கரமாக சென்றுக் கொண்டிருந்த நிலையில் 1500 எபிசோட்களை தாண்டி ரசிகர்களை கவர்ந்து இருக்கின்றது.இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆம் பாகம் ஆரம்பமாகி முதல் ப்ரோமோவும் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.

இதில் நடித்த தனம், கதிர், சரவணன், முல்லை, மீனா, ஐஸ்வர்யா இப்படி யாரும் இரண்டாம் பாகத்தில் இல்லை. இதனால் கடைசியாக இவர்கள் வெளியில் சென்றுள்ளார்கள்.

`பான்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இரண்டாவது சீசனின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இம்மாத இறுதியிலிருந்து ஒளிபரப்பு தொடங்கலாமென்கிறார்கள்.
இந்தச் சூழலில் முதல் சீசனில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் நடித்த நடிகர் நடிகைகளில் ஸ்டாலின், ஹேமா தவிர மற்ற நடிகர்கள் பார்ட் 2 வில் இல்லை. இது இந்த சீரியலைத் தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

முதல் சீசனில் நடித்தவர்கள் ஏன் இரண்டாவது சீசனில் இல்லை, முதல் பகுதி ஒரு பிராண்டாக உருவான பின் அதில் நடித்தவர்கள் இல்லாமல் பார்ட் 2 ஹிட் ஆகுமா, சேனல் இதை யோசிக்கவில்லையா என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் உலவ சீரியல் தொடர்புடைய சிலரிடம் பேசினோம்.”இந்த சீரியல் ஹிட் ஆனது முழுக்க முழுக்க ஒரு டீம் ஒர்க். நடிச்ச ஒவ்வொரு ஆர்ட்டிஸ்டுக்கும் வெற்றியில் பங்கிருக்கு. சில சமயங்கள்ல சில ஆர்ட்டிஸ்டுகளுக்குக் கூடுதலா புகழ் கிடைச்சு, அவங்களுடைய பங்களிப்பும் அதிகமா இருந்திருக்கலாம். மறைந்த சித்ராவை இந்த நேரத்துல குறிப்பிட மறக்கக் கூடாது. அவங்களால் சீரியலுக்கும் சீரியலால் அவங்களுக்குமே பேர் கிடைச்சது. இப்படியிருக்கிறப்போ, அடுத்த சீரியலைத் தொடங்க நினைச்சது சேனல். ஆனா சீரியல் தங்களாலேயே ஓடினதா நினைத்துக்கொண்ட சில ஆர்ட்டிஸ்டுகளாலதான் பிரச்னை தொடங்கிச்சு.

தங்களுக்கு சினிமா, வெப்சீரிஸ் வாய்ப்புகள் வர்றதாச் சொல்லி, அதனால தங்களால் நடிக்க முடியாதுன்னு சொல்லியிருக்காங்க. எங்களுக்குத் தெரிய, உண்மையிலேயே அப்படியெல்லாம் யாரும் பிஸியா இல்லை. சம்பளத்தைக் கூட்ட இப்படிச் சொல்லியிருக்காங்க. நேரடியா அதைச் சொல்லிக் கேட்டிருந்தாக் கூட பரவால்ல. இந்த மாதிரி பண்ணினதுல சேனல் கடுப்பாகிடுச்சு.

அந்தக் கடுப்புலதான் ஒருகட்டத்துல ‘வர்ற ஆர்ட்டிஸ்டுகளை வச்சு தொடங்கிடலாம், வரலைங்கிறவங்களை விட்டுடுங்க’னு சொல்லிட்டாங்க. பார்ட் 2 வில் நடிக்க மறுத்த ஆர்ட்டிஸ்டுகள் மேல சேனலுக்குமே ரொம்பவே வருத்தம்தான். அவங்கள்ல சிலர் கொஞ்ச நாளைக்காவது சேனல் பக்கம் தலைகாட்ட மாட்டாங்கன்னுதான் தோணுது ” என்கிறார்கள் இவர்கள்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற பெயருக்குப் பதில் ‘பாண்டியன் இல்லம்’ சீரியலின் பெயரைக் கூட மாற்றி விடலாமென ஆரம்பத்தில் யோசித்தார்களாம். ஆனால் சேனலின் ஒரு பிராண்டாக நினைத்ததாலேயே பிறகு பழைய டைட்டிலே இருக்கட்டுமென முடிவு செய்திருக்கிறார்கள்.

பாண்டியன் குடும்பத்தில் இருந்தவர்களில் வெங்கட் விஜய் டிவியில் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கிழக்கு வாசல்’ தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசித் தம்பியாக வந்த சரவண விக்ரம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருக்கிறார். ஹேமாவும் அவரது அப்பாவாக நடித்த ரவியும் இரண்டாவது சீசனில் இருக்கிறார்கள்.ஆக, ஸ்டாலின் மனைவியாக நடித்த சுஜிதா மற்றும் கதிராக நடித்த குமரன் இருவரையும்தான் இரண்டாம் சீசனுக்கு வர மறுத்து முரண்டு பிடித்தவர்களாகக் கை காட்டுகிறார்கள் சீரியல் யூனிட்டுக்கு நெருக்கமானவர்கள்.

இவர்கள் இருவரின் மீதுதான் சேனல் கடும் அதிருப்தியிலிருப்பதாகத் தெரிகிறது.

இதற்கிடையில் இரண்டாவது சீசனில் நடிகர் அஜய் ரத்னம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஸ்டாலின் குடும்பத்துக்குத் தரப்படும் முக்கியத்துவம் இவரது குடும்பத்துக்கும் இருப்பது போலவே கதை நகருமாம்.

முதல் பார்ட் ஹிட் ஆனது போல் இரண்டாவது சீசனும் ஹிட் அடிக்குமா என்பது சீரியல் ஒளிபரப்பான பிறகே தெரியவரும்.நன்கு படித்த தைரியமான பெண்ணான தனலட்சுமி, தன் குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக சத்தியமூர்த்தியின் வாழ்க்கையில் நுழைந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வழிவகுக்கிறாள். அவள் தன் மைத்துனர்களை தன் மகன்களாக வளர்க்கிறாள். பல வருடங்கள் கழித்து, ஜீவாவை சிறுவயதிலிருந்தே நேசித்த மல்லியின் தங்கை முல்லையுடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். இருப்பினும் ஜீவா தனது கல்லூரி தோழி மீனாட்சியை காதலித்து வந்தார். எனவே, முல்லை கதிரை மணக்கிறார், மீனா ஜீவாவை மணக்கிறார். குடும்பத்தின் கடைசி மகனான கண்ணன், தனத்தின் அண்ணியின் வளர்ப்பு மகள் ஐஸ்வர்யாவுடன் ஓடிவிடுகிறார். கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து மீதிக்கதை அமைந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்