Tuesday, July 2, 2024 3:20 am

தொடர் மழையால் தென்னாப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தாமதம்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தர்மஷாலா மைதானத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், தென்னாப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த போட்டி இன்று (அக்.17) மதியம் 2 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மழை காரணமாகப் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்றபின் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பந்துவீச்சு தேர்வு செய்தது. ஆனால், சில நிமிடங்களில் மீண்டும் மழை பெய்தது

இதனால், மழை தீர்ந்து போட்டி மைதானம் ஆடுகளம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்த பின்னர், போட்டி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​மைதானத்தில் மழை பெய்து வருவதால், போட்டி தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் இரண்டுமே உலகக் கோப்பையில் வெற்றி பெற வாய்ப்புள்ள அணிகள். எனவே, இந்த போட்டி மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்