Saturday, April 13, 2024 6:32 pm

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி நாள் கிளைமாக்ஸ் போட்டோவை வெளியிட்ட சீரியல் குழு.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல தொலைக்காட்சித் தொடரான தவமாய் தவமிருந்து சிறப்புக் கிளைமாக்ஸுடன் தனது பயணத்தை விரைவில் முடிக்கவுள்ளது. ஏப்ரல் 2022 இல் திரையிடப்பட்ட இந்த நிகழ்ச்சி 1430 எபிசோட்களுக்கு மேல் ஒளிபரப்பப்பட்ட பிறகு முடிவடைகிறது.
கடந்த சில மாதங்களாக, ஸ்டாலின் முத்து, சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேம ராஜ் சதீஷ், குமரன் தங்கராஜன், லாவண்யா ஆகிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து நிகழ்ச்சி நடைபெற்றது.

விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக பல ஆண்டுகளாக மாஸ் காட்டி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த தொடர் 1300 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பாகிவரும் நிலையில் விரைவில் எண்ட் கார்ட் போடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.விரைவில் நிறைவடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்ந்து சேனலில் முன்னிலை பெற்று வருகிறது. கடந்த வாரத்திலும் இந்தத் தொடர் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இந்தத் தொடர், விரைவில் எண்ட் கார்ட் போடப்பட உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. மீனாவின் அப்பா ஜனார்த்தனனை கொலை செய்ய பிரஷாந்த் முயற்சித்த நிலையில், அந்தக் கொலை முயற்சி மற்றும் மேனேஜர் கொலை ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டு ஜீவா மற்றும் கதிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்கும்வகையில், ஜனார்த்தனனை மருத்துவமனையில் வைத்து கொலை செய்ய பிரஷாந்த் முயற்சித்த நிலையில், அதை வீடியோவாக மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் எடுத்தனர். இந்த வீடியோ ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பித்த நிலையில், ஜீவா மற்றும் கதிரை விடுவிக்க இந்த ஆதாரம் போதாது என்று நீதிபதி கூறுகிறார். தொடர்ந்து ஜனார்த்தனர் உயிர்பிழைத்து வாக்குமூலம் அளிக்க வேண்டும் அல்லது பிரஷாந்த் கைதாக வேண்டும் என்றும் கூறுகிறார்.

இதனிடையே, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜனார்த்தனருக்கு நினைவு திரும்புகிறது. இதையடுத்து பிரஷாந்த் தான் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக அவர் வாக்குமூலம் அளிக்கிறார். இதையடுத்து இந்த ஆதாரத்தை கோர்ட்டில் மூர்த்தி சமர்ப்பிக்கிறார். தொடர்ந்து ஜீவா மற்றும் கதிரை விடுவிக்கும் நீதிபதி, விரைவில் பிரஷாந்தை கைது செய்யவும் போலீசாரிடம் வலியுறுத்துகிறார்.

ஜீவா மற்றும் கதிர் விடுவிக்கப்பட்ட நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அதை கொண்டாடுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. மேலும் விரைவில் இந்த தொடர் எண்ட் கார்ட் போடப்பட உள்ள நிலையில், குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது தனமாக நடித்துவரும் சுஜிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஜனார்த்தனர் தலையில் கட்டு போட்டபடி காணப்படுகிறார்.

இந்தப் புகைப்படம்தான் தன்னுடைய பெஸ்ட் மற்றும் ஸ்பெஷல் செல்பி என்றும் சுஜிதா குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்தது குறித்து மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து கண்டிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரையும் மிஸ் செய்வோம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மருத்துவமனையில் சுயநினைவின்றி இருந்த ஜனார்த்தனன் தற்போது நினைவு திரும்பி, வாக்குமூலம் கொடுத்த நிலையில் கொலை முயற்சி வழக்கில் சிறையில் இருந்த ஜீவா மற்றும் கதிர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதன் பின்னர் தனம் குணமடைந்து விட்டார்.அத்தோடு புதுவீட்டுக்கும் சென்று விட்டனர். கண்ணனிடமிருந்து பறிபோன பாங்க் வேலையும் திரும்ப கிடைத்து விட்டது. பிரசாந்தால் ஜெயிலுக்கு போன ஜீவாவும் கதிரும் திரும்ப வந்து விட்டனர். அத்தோடு குடும்பம் அனைத்தும் ஒன்றாக இணைந்து விட்டனர்.அதில் ஜனார்த்தனன் தலையில் கட்டுடன் இருப்பது போல காட்டப்பட்டு இருக்கிறது. புகைப்படம் இதோ..

பல வருடங்கள் கழித்து, ஜீவாவை சிறுவயதிலிருந்தே நேசித்த மல்லியின் தங்கை முல்லையுடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். இருப்பினும் ஜீவா தனது கல்லூரி தோழி மீனாட்சியை காதலித்து வந்தார். எனவே, முல்லை கதிரை மணக்கிறார், மீனா ஜீவாவை மணக்கிறார். குடும்பத்தின் கடைசி மகனான கண்ணன், தனத்தின் அண்ணியின் வளர்ப்பு மகள் ஐஸ்வர்யாவுடன் ஓடிவிடுகிறார். கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து மீதிக்கதை அமைந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்