Monday, June 17, 2024 9:46 am

எதிர்நீச்சல் சீரியல் இப்படியே போச்சுன்னா கஷ்டம்தான் ! எதிர்நீச்சல் ப்ரோமோவை பார்த்து கடுப்பான ரசிகர்கள் !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எதிர்நீச்சலின் சமீபத்திய அத்தியாயங்களில், குணசேகரன் குடும்பத்தின் மீது தனது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் தொடர்ந்து வலியுறுத்துகிறார். ஆதிரை அடித்ததற்காக ஈஸ்வரியை திட்டி பதிலுக்கு அறைந்தார். குணசேகரனின் செயல்களை ஆதரிப்பது போல் இருக்கும் கதிர், கைதட்டி கொண்டாடுகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் பத்தாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் போலீஸ்காரர்களால் கைது செய்து கூட்டிட்டு போன குணசேகரனை காணவில்லை என்று வழக்கறிஞர் கூறுகிறார்.அதே நேரத்தில் ஜனனியின் அப்பா நாச்சியப்பன் மீண்டும் குணசேகரனின் வீட்டிற்கு வந்து அவரை பார்க்க வேண்டும் என்று சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் கதை ஒவ்வொரு நாளும் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆதி குணசேகரன் ஆக நடிகர் வேலராம மூர்த்தி அறிமுகமான பிறகு சீரியலில் மிரட்டல் காட்சிகள் தான் அதிகமாக இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. வந்த முதல் நாளே போலீஸ் ஆபீஸர்களை அடித்த புதிய குணசேகரன் பற்றி சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் நேற்றைய எபிசோடில் குணசேகரனை போலீஸ் ஆபீஸர் கைது செய்து கூட்டிட்டு போயிருந்தனர். அப்போது அவரை தொடர்ந்து காரில் கதிர், ஞானம், கரிகாலன் மூன்று பேரும் போய்க்கொண்டிருந்தனர். குணசேகரனை கைது செய்தது குறித்து ஞானம் வழக்கறிஞருக்கு போன் மூலம் தகவல் சொல்லியிருந்தார். அதே நேரத்தில் வீட்டில் அனைத்து பெண்களும் சோகமாக இருக்கும் நிலையில் விசாலாட்சி வழக்கம்போல அவர்களை வசை பாடிக் கொண்டிருந்தார்.என் பையன் ஜெயிலுக்கு போனதுக்கு காரணம் நீங்கதான் என்று விசாலாட்சி சொல்ல, அதை கேட்டு கோபமான ரேணுகா நாங்க தான் உங்க பையனை போலீஸ் ஆபீஸரை எட்டி மிதிக்க சொன்னமா? என்று கேட்க, அதற்கு என் பையன் வந்த முதல் நாளே உங்க முகர கட்டையும் மூஞ்சியும் சரியே இல்ல.

அதான் நான் பார்த்தேனே, ஆரத்தி எடுக்க சொல்லி வர சொன்னா நீங்க ஆளாளுக்கு ஒரு பக்கம் மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்கீங்க. ஏய் ஈஸ்வரி… அவன் உன் புருஷன் அந்த நினைப்பு கொஞ்சமாவது உன் மனசுல இருக்கா? என்று நேற்றைய எபிசோடில் வீட்டு மருமகள் திட்டியிருந்தார். அதற்கு ஜனனி விசாலாட்சியை பதிலுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் ஜனனியின் அப்பா நாச்சியப்பன் வீட்டிற்கு வந்து இருக்கிறார். அவரிடம் ஜனனி என்னப்பா திடீர்னு என்று விசாரிக்கிறார். அதற்கு நாச்சியப்பன் எங்க வீட்டில ஒரு முக்கியமான நிகழ்வு அதனாலதான் என்னுடைய சம்மந்திய அழைக்க வந்தேன் என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் கதிர்,ஞானம், வழக்கறிஞர் எல்லோரும் பரபரப்பாக இருக்கின்றனர். அப்போது வழக்கறிஞர் கதிர், ஞானத்திடம் நீங்க ஒரு விஷயம் தெரிஞ்சுக்கங்க சார், உங்க அண்ணன் இங்க இல்ல என்று சொல்ல கதிர் கோபமாக திட்டிக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து விசாலாட்சி வீட்டில் மருமகளிடம் அவமானப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறார். அதில் கோபமான ஈஸ்வரி உங்க பையன் பேசறது தான் முட்டாள்தனம் என்று சொல்ல, அதற்கு என் பிள்ளை முட்டாள்னா எவண்டி அறிவாளி? அந்த ஜீவானந்தம்மா.. என்று கேட்க, ஈஸ்வரி கடும் கோபத்தில் நிற்க அனைவரும் அதிர்ச்சி அடைந்து கோபப்படுகின்றனர். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இன்று நாச்சியப்பன் வீட்டிற்கு மீண்டும் வந்திருக்கும் நேரத்தில் பழைய குணசேகரன் அதாவது மாரிமுத்து இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் அவர் நாச்சியப்பனை கிண்டல் செய்து கலாய்ச்சி இருப்பார் என்றெல்லாம் மாரிமுத்து குறித்து நினைவுகளை பலர் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல ரேணுகா அன்றைக்கு கதிருக்கு கன்னத்தில் ஓங்கி அறை விட்டது போல இன்னைக்கு இப்படி பேசிய விசாலாட்சிக்கும் ஒரு அறை கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி இன்று என்ன நடக்கப் போகிறதோ என்று ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

ஆதி குணசேகரனாக நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். ஆனால் இடையில் அவர் காலமானதால் அவருக்கு பதிலாக தற்சமயம் வேலராமமூர்த்தி ஆதி குணசேகரனாக களம் இறங்கியுள்ளார். வேலராமமூர்த்தி வருகிறார் என்றதும் முதலில் அதிக வரவேற்பு இருந்தது.ஆனால் அவர் வந்து நடிக்க துவங்கியது முதல் தற்சமயம் எதிர்நீச்சல் நாடகம் தொடர்பாக எதிர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஏனெனில் இதற்கு முன்பு ஆதி குணசேகரனின் கதாபாத்திரம் பெண்களை எவ்வளவு எதிர்த்தாலும் அவர்களிடம் அவர்களை அடிப்பது போன்ற காட்சிகள் இருந்ததே கிடையாது.அதேபோல மிகவும் அடிமைப்பட்டு கடந்த அந்த குடும்பத்தின் பெண்கள் பெரிதாக வளர்ந்து வருவதற்கான முயற்சிகளை எடுத்து தொடர்ந்து அதில் வெற்றி பெற்று வந்து கொண்டிருந்தனர். இது அனைத்து பெண்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்து வந்தது.

இந்நிலையில் வேலராமமூர்த்தி வந்த பிறகு மீண்டும் அந்தப் பெண்கள் அனைவரும் அடக்கி ஒடுக்கப்பட்டனர். திரும்பவும் நாடகம் முதன்முதலில் ஆரம்பித்த போது எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு சென்று விட்டது.இதனால் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது மீண்டும் முதலில் இருந்து நாடகத்தை தொடங்குகிறார்கள் என்று கூறி எதிர்நீச்சல் நாடகம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை அளித்து வருகின்றனர். இப்படியே சென்றால் இன்னும் கொஞ்ச நாளில் எதிர்நீச்சல் நாடகத்தை மக்கள் அதிகமாக பார்ப்பார்களா என்பதே சந்தேகம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

பாட்டி சிறுமிகளுடன் பேச முயற்சிக்கிறார், மேலும் அவர்கள் வழியில் என்ன வந்தாலும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்துகிறார். தன்னால் அவர்களுக்கு வழிகாட்ட முடியும் என்பதையும், அவர்களின் வாழ்க்கைக்கான முடிவுகளை எடுக்க முடியாது என்பதையும் அவள் ஒப்புக்கொள்கிறாள்.
மறுபுறம், ரேணுகா கேள்வி – ‘ஏன் பாட்டி இப்போது அவர்களைத் தூண்டிவிடுகிறாள்?’ பாட்டி தனக்கு ஒருபோதும் கிடைக்காத ஒரு வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியிருப்பதாகவும், அவர்கள் தாங்களாகவே வெற்றிபெற முயற்சிக்க வேண்டும் என்றும் விளக்குகிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்