இயக்குனர் மகிழ் திருமேனியுடன் அஜித் குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் தற்போது தமிழ் சினிமாவின் பரபரப்பான திட்டங்களில் ஒன்றாகும். மே 2023 இல் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், சமீபத்தில் வரை படப்பிடிப்பு தொடங்கவில்லை. ஆதாரங்களின்படி, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது.அஜித்குமார் மற்றும் த்ரிஷா ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதற்கிடையில், இரண்டாவது நாயகியாக ‘காலா’, ‘வலிமை’ புகழ் ஹுமா குரேஷி நடிக்க இருப்பதாக யூகங்கள் கிளம்பின. ஆனால் இப்போது, அதே கதாபாத்திரத்தில் ரெஜினா கசாண்ட்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், ஹுமா குரேஷி படத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
இந்நிலையில் பாகுபலி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பல முன்னணி நடிகர்களும் ராஜா வேஷம் கட்ட ஆசைப்பட்டு வருகின்றனர். இயக்குநர் மணிரத்னம் தமிழ் சினிமாவுக்கு பொன்னியின் செல்வன் படத்தை கொடுத்து ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி உள்ளிட்ட நடிகர்களை பீரியட் ஃபிலிம் ஹீரோக்களாக காட்டியிருந்தார். ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக வேள்பாரி திரைப்படம் உருவாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சூர்யா கங்குவா படத்தில் போர் வீரனாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித் குமார் தஞ்சை பெரிய கோயிலை ராஜ ராஜ சோழன் எப்படி கட்டினார் என்கிற கதையில் நடிக்க திட்டமிட்டு இருந்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குநர் விஷ்ணுவர்தன் பாலிவுட்டுக்கு செல்வதற்கு முன்னதாகவே இந்த படத்தை உருவாக்கும் முயற்சியில் எழுத்தாளர் பாலகுமரனோடு சேர்ந்து பணியாற்றியதாக கூறப்படுகிறது. ராஜ ராஜ சோழனாக அஜித்: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாக நடித்திருந்தார். ஏற்கனவே ராஜ ராஜ சோழன் எனும் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கம்பீரமாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் அஜித் ராஜ ராஜ சோழனாக நடித்தால் அந்த படம் வேறலெவலில் மிரட்டும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
பாலிவுட்டில் பிஸி: ஆனால், அந்த படத்தை இயக்குவதற்கு முன்னதாக இயக்குநர் விஷ்ணுவர்தனுக்கு பாலிவுட்டில் ஷேர்ஷா படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அங்கே சென்று விட்டார். மேலும், ஏகே 62 படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவனை தூக்கிய நிலையில், நடிகர் அஜித்தே மீண்டும் விஷ்ணுவர்தனை தொடர்பு கொண்டதாகவும் ஆனால், சல்மான் கானின் உறவினர் ஒருவரின் படத்தில் கமிட் ஆன நிலையில், இப்போதைக்கு வர முடியவில்லை என விஷ்ணுவர்தன் கூறியதாக அந்தணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
விடாமுயற்சி படம் முடிந்ததும் நாமும் பிரம்மாண்டமான படத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் இப்போது அஜித்துக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் வரலாற்று படங்கள் பெரியளவில் வசூல் வேட்டை நடத்தி வருவதால், கூடிய சீக்கிரமே விஷ்ணுவர்தன் உடன் இணைந்து ராஜ ராஜ சோழனாக தஞ்சாவூர் பெரிய கோயில் கதையில் அஜித் நடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக அந்தணன் கூறியுள்ளார்.
இதையே மறுக்கும் சில செய்திகள் உள்ளன. மௌனத்தை கலைக்கும் அணிக்காக காத்திருக்க வேண்டும். இதற்கிடையில், விடாமுயற்ச்சியில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் தாஸ் முக்கிய வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த மதிப்புமிக்க திட்டத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், நீரவ் ஷாவின் டிஓபி மற்றும் சுப்ரீம் சுந்தரின் ஸ்டண்ட். படம் 2024ல் வெளியாகலாம்.