Wednesday, May 29, 2024 6:22 pm

சும்மா ஹாலிவுட் தரத்தில் உருவாகும் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் கதை கரு இதுவா !மிரட்டலா இருக்கே

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குனர் மகிழ் திருமேனியுடன் அஜித் கைகோர்த்து ‘விடாமுயற்சி’ திரைப்படம் ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகத் தொடங்கியது. ‘விடாமுயற்சி’ இயக்குனர் மகிழ் திருமேனி இன்று (அக் 9) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், படக்குழுவினர் இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டரைப் பகிர்ந்துள்ளனர்.மகிழ் திருமேனியுடன் அஜித்தின் படம். சில நாட்களுக்கு முன்பு, அஜித் ரசிகர்கள் நான்கு மாதங்களுக்கும் மேலாக படம் குறித்த எந்த புதுப்பிப்புகளையும் பகிராததால், சமூக ஊடகங்களில் தயாரிப்பு நிறுவனத்தை ஹேஷ்டேக் ட்ரெண்ட் மூலம் கேலி செய்தனர். மே மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட பிறகு, படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை, ஆனால் தயாரிப்பாளர்கள் படம் நிறுத்தப்படாது என்பதை நடுப்பகுதியில் உறுதிசெய்து, தயாரிப்பு நிறுவனத்தின் மதிப்புமிக்க திட்டம் என்று அழைத்தனர்.

மீகாமன் திரைப்படம் இந்தப் படம் போதை பொருளை மையமாக வைத்து உருவான ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது சொல்லப்போனால் லோகேஷ் தற்போது உருவாக்கி வரும் போதை பொருள் சம்பந்தமான படத்திற்கு முன்னோடியாக இந்த படம் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தடம். அருண் விஜய்க்கும் சரி, மகிழ்ந்திருமேனிக்கும் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. சிறு இடைவெளிக்கு பின் உதயநிதியுடன் கலகத் தலைவன் படத்தை எடுத்தார் இப்போ அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை எடுக்க உள்ளார். அதற்கான அனைத்து வேலைகளும் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது.

வெகு விரைவிலேயே ஷூட்டிங் நடக்கும் என தகவல்கள் வெளி வருகின்றன படத்தின் பெரும்பாலான சூட்டிங் அபுதாபி, துபாய் போன்ற இடங்களில் நடக்க இருப்பதாகவும் திரிஷா, அர்ஜுன், அர்ஜுன் தாஸ், பிக்பாஸ் ஆரவ், சஞ்சய் தத் போன்றவர்கள் நடிக்க இருப்பாதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காணும் மகிழ் திருமேனி அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் அதன்படி விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா மகிழ் திருமேனி புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

மேலும் ஆக்சன் மற்றும் திரில்லர் படங்களை எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர்.. விடாமுயற்சி மேலலோங்குகிறது என கூறியுள்ளது இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் விடாமுயற்சி படம் கூட ஒருவேளை ஆக்சன் மற்றும் திரில்லர் கலந்த படமாக இருக்கலாம் என அதைத்தான் தயாரிப்பு நிறுவனம் சூசகமாக சொல்லி உள்ளது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

முன்னதாக அஜித்துடன் வேதாளம், விவேகம் படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் அனிருத் மீண்டும் நடிகருடன் இணையவிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அஜித்துடன் பில்லா, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் சமீபத்திய துணிவு ஆகிய படங்களில் ஒத்துழைத்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, விடாமுயற்சியிலும் பணியாற்றவுள்ளார்.

இந்த சூழலில் விடாமுயற்சி படத்தின் ஸ்டோரி இப்படித்தான் இருக்கும் என்பது இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதனால் மகிழ்திருமேனி பயங்கர அப்செட்டில் இருக்கிறார். இதுவரை மகிழ்திருமேனி டாப் நடிகர்களை வைத்து இயக்கவில்லை என்றாலும் அவருடைய படங்கள் அனைத்தும் பெரிதும் பாராட்டக்கூடிய படங்களாகத்தான் அமைந்திருக்கிறது.இவருடைய படங்கள் ஆக்சன் மற்றும் இன்டெலிஜென்ஸ் திரில்லர் கலந்த படமாக இருப்பதால் ரசிகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் தான் இப்போது அஜித்தின் விடாமுயற்சியை இயக்குவதற்கான வாய்ப்பு மகிழ்திருமேனியை வந்தடைந்துள்ளது. இந்நிலையில் விடாமுயற்சியின் டைட்டிலை வைத்து பார்க்கும்போது, இதில் அஜித் ஒரு விஷயத்தில் ஒரே முறையில் வெற்றி பெறாமல் பல அட்டம்ட்டுகளை எடுத்து கடைசியில் விடாமுயற்சியுடன் வெற்றி பெறுவது தான் இந்த படத்தின் மைய கருவாக இருக்கும்.

ஏதாவது ஒரு மிஷனை அஜித் கையில் எடுத்து பல முறை தோல்வியை சந்தித்து கடைசியில் கிளைமாக்ஸில் விடாமுயற்சியுடன் வெற்றி பெறுவது தான் இந்த படத்தின் கதை. அது மட்டுமல்ல ஒரே முயற்சியில் சக்ஸஸ் கிடைத்துவிட்டால் விடாமுயற்சிக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

இதனால் ரசிகர்களுக்கும் ஒரு விதமான பாசிட்டிவிட்டி இருக்கும் என்று அஜித் நம்புகிறார். இப்போது விடாமுயற்சியின் கதை எப்படி இருக்கும் என்பது ஓரளவு ரசிகர்களுக்கு தெரிந்து விட்டதால் பட குழு படத்தில் நிச்சயம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கின்றனர்.

தலைப்பு வெளிப்படுத்தும் போஸ்டர் ஒரு பிரமை மீது விடஅமுயற்சியின் எழுத்துருவைக் காட்டுகிறது. படத்தின் தலைப்பு, “முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது”. படத்தின் நடிகர்கள் மற்றும் வகை பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அவை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ் திருமேனி கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் ‘கலக தலைவன்’. தீய கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போரிடும் ஒரு விழிப்புணர்வின் பயணத்தைத் தொடரும் திரில்லர்.லைகா புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்கப்படும் இந்த அதிரடி திரில்லர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இதற்கிடையில், த்ரிஷா கிருஷ்ணனைப் பற்றி பேசுகையில், நடிகை அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்