Friday, December 8, 2023 3:12 pm

எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேட்ட கேள்வியால் ஆடிப்போன விசாலாட்சி! கதிருக்கு நடந்த அவமானம் நேற்றைய எபிசொட் அப்டேட் !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எதிர்நீச்சலின் சமீபத்திய எபிசோட்களில், கரிகாலனும் குணசேகரனும் மாறி மாறி மாறி மாறி வீட்டில் குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிறார்கள். சண்டை அதிகரிக்கும் போது விசாலக்ஷின் அமைதிக்கான வேண்டுகோள்கள் காதில் விழுகின்றன. வன்முறையில் தலையிடவோ தடுக்கவோ முடியாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் நிராதரவாகப் பார்க்கிறார்கள்.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மீண்டும் வீட்டிற்கு வந்திருந்த குணசேகரன் நேற்றைய எபிசோடு முழுக்கவே காணவில்லை.அதே நேரத்தில் வீட்டு மருமகள்கள் குணசேகரனுக்கு எதிராக புது பிளான் போட்டு கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் கதிர், நந்தினியை அடிக்க அதற்கு தாரா கதிரை அவமானப்படுத்துகிறார் இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.அந்த வகையில் எபிசோடு ஆரம்பித்து அப்பத்தா வீட்டு மருமகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நீங்க நினைச்ச மாதிரி குணசேகரன் கிடையாது. உங்களுடைய மனதை உருகுலைய வைத்து அடுத்து என்ன செய்யலாம் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறான். நீங்க செய்யும் வேலையை தடுத்து விட்டால் நீங்கள் உடைத்து போய்விடுவீர்கள் என்று குணசேகரனுக்கு தெரியும். அதை தான் செய்திருக்கிறான். நீங்கள் இப்படியே இருந்து விட்டால் அடைந்து கிடக்க வேண்டியது தான். என்னுடைய எதிர்பார்ப்பு படி குணசேகரன் நாளை காலை புது பிரச்சனை செய்வான். அடுத்து நான் தான் அவனுடைய டார்கெட் ஆக இருப்பேன். என்னிடம் இருக்கும் 40% ஷேர் வைத்து நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரிந்து கொள்வதற்காக குணசேகரன் புது பிளான் போடுவான். ஆனால் இப்போதும் சொல்கிறேன் உங்களுக்கு அந்த சொத்துக்களை தரமாட்டேன்.

அதை நீங்கள் எதிர்பார்த்தால் எதுவும் கிடைக்காது. என்னை எனக்கு பார்த்துக் கொள்ள தெரியும். உங்களை நீங்கள் தான் இனி பார்த்துக் கொள்ள வேண்டும். இவன் பிரச்சனை பண்ணி விட்டான் என்று நீங்கள் உடைந்து உட்கார்ந்தால் அவ்வளவுதான் என்று அப்பத்தா பேசிக் கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து மாடியில் ஞானம், கதிர், கரிகாலன் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு மோர் குடித்துக் கொண்டிருக்கின்றனர்.அந்த நேரத்தில் கரிகாலன் அத்தை சமையல் சூப்பராக இருந்தது. மதியமும் இரவு நல்லா சாப்பிட்டாச்சு என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் நந்தினி தாராவுக்கு பால் கொண்டு வந்து கொடுக்க, அதைப் பார்த்த கதிர் நந்தினி இடம் சண்டை போடுகிறார். எங்க அம்மா சாப்பாடை சாப்டியா என்று ஆணவமாக பிரச்சனை செய்து கொண்டிருக்க, அதற்கு பதிலுக்கு பதில் பேசிக் கொண்டிருந்த நந்தியை ஒரு கட்டத்தில் கோபமாகி கதிர் கன்னத்தில் அடித்து விடுகிறார்.அப்போது தாரா உங்களை எனக்கு சுத்தமா பிடிக்கல அப்பா, நீங்க பண்ணுறது எல்லாமே தப்பு, நீங்க ரொம்ப பெரிய தப்பு பண்றீங்க. வீட்டில் யாருக்கும் மரியாதை கொடுக்கிறது கிடையாது. அடிக்கடி இப்படி அடிச்சிட்டு இருக்கீங்க என்று பேச அதற்கு விசாலாட்சி எல்லாரையும் திட்டுகிறார். குழந்தையை நீங்க தப்பா வளர்த்துட்டீங்க என்று சொல்லித் திட்ட அதற்கு ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி என்று எல்லோரும் பதிலுக்கு பதில் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது ஈஸ்வரியை பார்த்து “ஈஸூ” என்று கதிர் கூப்பிட எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதோடு இனி உன்னை அண்ணி தண்ணி என்று எல்லாம் சொல்ல மாட்டேன். ஈஸ் என்று தான் கூப்பிடுவேன் என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி வாடா போடா என்று கதிரை திட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.அதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் ரேணுகா சாமி கும்பிட்டபடி கிச்சனுக்கு வர அங்கு நந்தினி கீழே படுத்திருக்கிறார்.

அதை பார்த்து பதறிப் போய் என்ன ஆச்சுன்னு நேற்று இரவு மீண்டும் ஏதும் பிரச்சனை நடந்துச்சா? என்று கேட்க இல்லை நம்ம இனி என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. அதுவரைக்கும் தைரியமா இருந்தேன் ஆனால் நேற்று மூத்தவர் வந்து பேசுனதும் நான் பயந்து போய்விட்டேன். அதுவும் நம்ம கண்ணு முன்னாடி அக்காவை அந்த அடி அடிச்சிட்டாரு. அதை பாத்து நான் ஆடி போயிட்டேன் என்று சொல்லிக்கொண்டு இருக்க அந்த நேரத்தில் ஜனனியும் அங்கு வருகிறார்.

ஜனனி இடம் ரேணுகாவும், நந்தினியும் மன்னிப்பு கேட்கின்றனர். நாங்க எவ்வளவோ முன்னேறனும் முயற்சி செய்கிறோம். ஆனால் இங்கு நடக்கிறதை பார்த்தா ரொம்ப பயமா இருக்கு என்று சொல்லிக் கொண்டு இருக்க, அதற்கு ஜனனி உங்களுடைய பயம்தான் அங்களுடைய வெற்றி. நீங்க இப்படி பயப்படுவீங்கன்னு தெரிஞ்சு தான் அவங்க இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

நான் திரும்பி வந்தது அப்பத்தாவுக்காக மட்டுமல்லாமல் உங்களுக்காக தான் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக நேற்றைய எபிசோடு முடிவடைந்தது. ஆனால் நேற்று எபிசோடு முழுக்கவே அதை குணசேகரனை காணவில்லை. இந்த நிலையில் இன்று ஈஸ்வரி மற்றும் கதிர் சண்டைக்கு என்ன பிரச்சனை செய்யப் போகிறாரோ என்று பொறுத்திருந்து பார்ப்போம்.எபிசோட் முடியும்போது, கரிகாலனையும் குணசேகரனையும் பிரிக்க மக்கள் தீவிரமாக முயற்சிப்பதால், முழு குடும்பமும் குழப்பத்தில் மூழ்கியது. விசாலாக்ஷி தன் கண் முன்னே விரியும் வன்முறையால் ஆழ்ந்து பாதிக்கப்பட்டு அழுது, அமைதிக்காக மன்றாடுவதைக் காணலாம். குடும்பத்தில் எஞ்சியவர்கள் தங்கள் வீட்டைப் பிரித்துள்ள மோதலுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உதவியற்றவர்களாகப் பார்க்கிறார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்