Tuesday, June 25, 2024 8:25 am

இறுதி கட்டத்தை நோக்கி செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ! பாபநாசம் படத்தை மிஞ்சிய கதை.. ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான தினசரி சோப் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடந்த சில மாதங்களாக TRP ரேட்டிங்கில் சரிவு காரணமாக விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. க்ளைமாக்ஸ் எபிசோட்களை படக்குழுவினர் தற்போது படமாக்கி வருகின்றனர், இது விரைவில் ஒளிபரப்பப்படும்.பிரபல தொலைக்காட்சித் தொடரான தவமாய் தவமிருந்து சிறப்புக் கிளைமாக்ஸுடன் தனது பயணத்தை விரைவில் முடிக்கவுள்ளது. ஏப்ரல் 2022 இல் திரையிடப்பட்ட இந்த நிகழ்ச்சி 1430 எபிசோட்களுக்கு மேல் ஒளிபரப்பப்பட்ட பிறகு முடிவடைகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் 7ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜனார்த்தனனின் இந்த நிலைமைக்கு காரணம் பிரசாந்த் தான் என்பதை மீனா மூர்த்தி வீட்டில் அனைவரிடமும் கூறுகிறார்.அதைத்தொடர்ந்து பிரசாந்தை மாட்ட வைக்க வேண்டும் என்று மொத்த குடும்பமும் பிளான் போடுகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் விஜய் டிவியில் 5 வருடங்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி சாதனை படைத்திருக்கிறது. அதே நேரத்தில் ஆயிரம் எபிசோடுகளை தாண்டிய முதல் சீரியல் என்றும் இந்த சீரியல் சாதனை படைத்திருக்கும் நிலையில் தற்போது இந்த சீரியலில் இறுதி கட்டம் வந்திருக்கிறது.

அண்ணன் தம்பியின் ஒற்றுமையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் தற்போது இறுதி அத்தியாயத்தில் இருக்கும் நிலையில் என்ன மாதிரி கதை முடிவு வரும் என்று அதிகமான ரசிகர்கள் காத்திருந்தனர். அதே நேரத்தில் இதுவரைக்கும் தன்னுடைய குடும்பத்தின் மீது நம்பிக்கையாய் இருந்த மீனா பிரசாந்தின் சூழ்ச்சியால் தன்னுடைய அப்பாவை கொலை முயற்சி செய்தது ஜீவா மற்றும் கதிர் தான் என்று தப்பாக புரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அதே நேரத்தில் வீட்டிற்கு வந்து மீனாவிடம் பேச வந்த முல்லையையும் மீனா அவமானப்படுத்தி அனுப்பி இருந்தார். இந்த நிலையில் இனி பிரசாந்த் தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம் என்பது யார் மூலமாக தெரிய வரும் என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. இந்த நிலையில் இன்று அக்டோபர் ஐந்தாம் தேதியில் இருந்து ஏழாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் ஜீவாவும் கதிரும் அந்த நேரத்தில் எங்க இருந்தாங்க என்கிற சின்ன ஆதாரம் கிடைத்தால் கூட அவங்கள ஈசியா வெளிய கொண்டு வந்து விடலாம் என்று மூர்த்தி ஐஸ்வர்யா கண்ணன் முல்லையிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா வீட்டிற்குள் வருகிறார் மீனாவை பார்த்ததும் முல்லை கோபத்தில் வீட்டிற்குள் போகப் போகிறார். அப்போது மூர்த்தி அவரை நிற்க சொல்லிவிட்டு மீனா என்னதான் சொல்ல வருதுன்னு கேட்போம் என்று மீனா என்னப்பா இப்ப வந்திருக்க என்று விசாரிக்கிறார். அப்போது மீனா மாமா இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம், எங்க அப்பாவை அடிச்சது மேனேஜர் சாரை கொலை பண்ணுனது எல்லாத்துக்கும் காரணம் அந்த பிரசாந்த் தான். அவனை போலீஸில் பிடிச்சு கொடுத்து ஜீவாவையும் கதிரையும் ரெண்டு பேரையும் வெளியே கொண்டு வரணும் என்று சொல்ல, அதற்கு மூர்த்தி மீனா எனக்கு ஒரு யோசனை வருது பா அதை மட்டும் நம்ம சரியா செஞ்சிட்டோம்னா அவன் காலம் முழுக்க ஜெயில்ல தான் இருக்க வேண்டும் என்று சொல்ல எல்லோரும் சரி என்று சொல்கின்றனர். அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் ஜனார்த்தனனின் ரூம் அருகில் மீனா, மீனாவின் அம்மா, மீனாவின் தங்கை என மூன்று பேரும் காத்திருக்க அப்போது பிரசாந்த் நீங்க எவ்வளவு நேரம் தான் இப்படி ரெஸ்ட் இல்லாம முழிச்சி இருப்பீங்க? நீங்க வீட்டுக்கு போங்க நான் பாத்துக்குறேன் உங்க அப்பாவ என்று சொல்லி மூன்று பேரையும் அனுப்பி வைக்கிறார். அதைத்தொடர்ந்து எல்லோரும் போகும்போது பிரசாந்த் வெளிய அக்கம்பக்கம் பார்த்துவிட்டு ரூமிற்குள் போகிறார்.

அப்போது பிரசாந்தை கையும் களவுமாக பிடிப்பதற்காக ரூமிற்குள் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் ஒளிந்து இருக்கின்றனர். அதேபோல ஹாஸ்பிடலில் முல்லையின் அப்பா, மூர்த்தி என ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கமாக இருந்து வெளியே வருகின்றனர் இப்படியாக வெளியான ப்ரோமோவை பார்க்கும் போது கடைசி நேரத்தில் இவர்கள் கூட்டுக் குடும்பமாக சேர்ந்து பாபநாசம் திரைப்படத்தை மிஞ்ச வைக்கும் அளவிற்கு மிரட்டுறாங்களே? இவங்க போடுற பிளானால் எப்படியும் பிரசாந்து மாட்டி விடுவான். ஜீவா கதிரை, வெளியே கொண்டு வந்து அடுத்த வாரத்தோடு சீரியல் முடிவுக்கு வந்துவிடும்.

பாண்டியனின் நான்கு மகன்களைச் சுற்றியே கதை நகர்கிறது.
சத்தியமூர்த்தி, ஜீவானந்தம், கதிரவன் மற்றும் ஜெயக்கண்ணன்) அவர்களின் சொந்த ஊரான குன்றக்குடியில் உள்ள பிரபல மளிகைக் கடையான பாண்டியன் ஸ்டோர்ஸை நடத்தி வருபவர்கள்.
நன்கு படித்த தைரியமான பெண்ணான தனலட்சுமி, தன் குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக சத்தியமூர்த்தியின் வாழ்க்கையில் நுழைந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வழிவகுக்கிறாள். அவள் தன் மைத்துனர்களை தன் மகன்களாக வளர்க்கிறாள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்