Thursday, April 18, 2024 6:16 am

திமுக அரசு கோயில்களை கைப்பற்றவில்லை : பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் நடைபெற்ற ‘வள்ளலார் – 200’ விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை, திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோயில் சொத்துகள் மற்றும் வருமானங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பிரதமர் பகிரங்கமாகப் பேசி இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். பிரதமருக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

அதன்படி, பிரதமர் மோடி அவர்கள் தற்போது  தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது, “தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை, திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோயில் சொத்துகள் மற்றும் வருமானங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று குற்றம்சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின், “திமுக அரசு கோயில்களைக் கைப்பற்றவில்லை. மாறாக, கோயில்களை மக்களுக்குச் சொந்தமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் 1000 கோவில்களுக்குக் குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம். ரூ.3,500 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் முறைகேடாக நடந்ததா?

ஒரு மாநில அரசின் செயல்பாடு குறித்து இன்னொரு மாநிலத்தில் பேசுவது முறையா? பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின் பிரதமர் தவறான, அவதூறு செய்தியைச் சொல்வது சரியா? பிரதமர் மோடி, இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால், அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும்” என்று கூறினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்