Friday, December 1, 2023 5:48 pm

பாக்கியலட்சுமி சீரியலில் முழு வில்லனாக மாறிய கோபி.. விரைவில் சிக்கப்போகும் செழியன் ! இன்றைய எபிசொட் அப்டேட்

spot_img

தொடர்புடைய கதைகள்

பிரபு ராம் வியாஸுடன் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

முன்னதாக, நடிகர் மணிகண்டன், அறிமுக திரைப்பட தயாரிப்பாளர் பிரபு ராம் வியாஸுடன்...

விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் படத்தின் பூஜை புகைப்படம் வைரல் !

வி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் கலைப்புலி எஸ் தாணு தயாரித்த அடுத்த...

நடிகை ஆர் சுப்பலட்சுமி காலமானார்

வியாழன் அன்று திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் சுப்பலட்சுமி திருவனந்தபுரத்தில் காலமானார்....

மிஷ்கின் – விஜய் சேதுபதி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இதோ !

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக நாம் முன்பே...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாக்கியலட்சுமி படத்திலிருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்த நடிகர் சதீஷ்குமார், தற்போது கோபியின் கேரக்டரில் தொடர்ந்து நடிக்கவுள்ளார். முன்னதாக நடிகர் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்தினார், ஆனால் அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். ரசிகர்களின் தொடர்ச்சியான கோரிக்கை அவரது மனதை மாற்றியுள்ளதாக தெரிகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் காலை ஆனபிறகும் ஹாஸ்பிடலுக்கு செழியன் வராததால் ஜெனி பாக்கியாவிடம் சொல்லி செழியனுக்கு போன் செய்ய சொல்கிறாள்.பாக்கியாவும் செழியனுக்கு போன் செய்யவும் செழியன் ஹாஸ்பிடலுக்கு வந்து விடுகிறான்.செழியன் மீது சந்தேகப்பட்ட பாக்கியா அவனை தனியாக அழைத்து சென்று “நீ செய்வது எதுவும் சரியில்லை. ஏதோ தப்பா இருக்கு” என சொல்லி கண்டிக்கிறார்கள். வீட்டுக்கு வந்த பாக்கியா ஈஸ்வரியிடம் புதிய சமையல் காண்ட்ராக்ட் ஒன்று எடுக்க போவதாக சொல்லி, அது குறித்து பேசுவதற்காக கிளப்புகிறேன் என சொல்கிறாள். ஈஸ்வரி பாக்கியாவிடம் “எப்படியாவது நீ இந்த காண்ட்ராக்ட்டை எடுத்து அந்த ராதிகாவோட முகத்தில் கரியை பூச வேண்டும்” என சொல்லி வாழ்த்தி அனுப்புகிறார்.

ஜெனியை வீட்டுக்கு அழைத்து வருவது குறித்து ஈஸ்வரியிடம் பாக்கியா பேச “கொஞ்ச நாள் ஜெனி அவங்க அம்மா வீட்ல இருக்கட்டும். அப்புறமா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்” என ஈஸ்வரி சொல்கிறார். ராமமூர்த்தி பாக்கியாவிடம் “எதற்காக ஜெனியை வீட்டுக்கு இப்பவே கூட்டிட்டு வரணும் என சொல்ற?” எனக் கேட்கிறார். “செழியன் நடவடிக்கை எதுவும் சரியில்லை. ஏதோ தப்பா இருக்கு” என்கிறாள் பாக்கியா. அதற்கு ராமமூர்த்தியும் “நானும் அதை கவனித்து கொண்டு தான் இருக்கிறேன்” என சொல்கிறார்.நிலா பாப்பாவுடன் எழில் கொஞ்சி விளையாடிக் கொண்டு இருக்கிறான். செழியன் குழந்தையைப் பார்த்த பிறகு எழிலுக்கு குழந்தை மீது ஆசை வந்து விடுகிறது. அப்போது அங்கே வந்த அமிர்தாவிடம் “நாமளும் ஒரு குழந்தை பெத்துக்கலமா” என கேட்கிறான் எழில். அதைக் கேட்டு சந்தோஷப்படும் அமிர்தா சம்மதம் சொல்கிறாள்.

பாக்கியா சமையல் காண்ட்ராக்ட் விஷயமாக ஒரு ஆபிஸூக்கு செல்கிறாள். அது கோபியின் நண்பன் வினோத்தின் மாமனார் ஆபீஸ். எதேச்சையாக கோபி அங்கே வர பாக்கியாவை பார்த்து விடுகிறார். எதற்காக பாக்கியா அங்கே வந்து இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டு தனது நண்பன் வினோத்திடம் பேசி அந்த காண்ட்ராக்ட் பாக்கியாவுக்கு கிடைக்காத மாதிரி செய்து விடுகிறார்.

காண்ட்ராக்ட் பாக்கியாவின் கையில் வரும் சமயத்தில் அதைக் கெடுத்துவிட்ட கோபி, பாக்கியாவும் செல்வியும் வெளியே வந்ததும் “இந்த சிட்டி உள்ள நீ எங்கேயும் புது காண்ட்ராக்ட் இனிமே எடுக்கவே முடியாது, எடுக்கவும் நான் விடமாட்டேன்” என வில்லன் போல பேசுகிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.

பாக்கியலட்சுமியின் கதைக்களம் பாக்கியா, ஒரு இனிமையான, அக்கறையுள்ள மனைவி, தாய் மற்றும் மருமகளை சுற்றி வருகிறது. செழியன், எழில், இனியா ஆகிய மூன்று பிள்ளைகள். அவர் கோபிநாத்தை மணந்தார், அவர் தனது முன்னாள் வருங்கால மனைவி ராதிகாவுடன் உறவு வைத்துள்ளார். பிந்தையவர் தனது மகள் மயூராவை ஒரு தாயாக வளர்த்து வருகிறார். கோபி, பாக்கியா, ராதிகா இடையே என்ன நடக்கிறது என்பதே கதையின் மீதிக்கதை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்