சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்கும் வங்கதேச அணிக்கும் இடையிலான அரையிறுதி டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆகவே, இதில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து, இந்திய அணியின் சிறப்பான பவுலிங்கால் அடுத்தடுத்த வீரர்களும் 10 ரன்களுக்கு மேல் எடுக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களான சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இந்திய அணிக்கு வெற்றிக்கு 97 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 9.2 ஓவர்களில் 1 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்து இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தங்க வெல்ல இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மேலும், இந்திய அணியின் வெற்றிக்கு, பந்துவீச்சில் சாய் கிஷோர் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் பங்களிப்பு முக்கியமானது. அதைப்போல், ருத்துராஜ் கெய்க்வாட் – 40*(26), திலக் வர்மா – 55* (26)இவர்கள் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வங்கதேச அணியின் பேட்டிங்கை கட்டுப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.