மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (அக்.5) முதல் வரும் அக் .11ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு பகுதியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனத் தெரிவித்தது
மேலும், இந்த வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ”தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்” எனக் கூறிருந்தது
அதன்படி, இந்த வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பைப் பொறுத்து, மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது