Thursday, June 13, 2024 7:40 am

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனை நார் நாராக கிழித்து தொங்கவிட்ட ஜனனி !ஈஸ்வரியை அண்ணனிடம் கோர்த்துவிட்ட கதிர்! சூடுபிடிக்கும் எதிர்நீச்சல் ப்ரோமோ அப்டேட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலில் ஏஜிஎஸ் கதாபாத்திரத்தில் மாரிமுத்துவுக்குப் பதிலாக நடிக்கப் போகும் நடிகர் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல எழுத்தாளரும் குணச்சித்திர நடிகருமான வேல ராமமூர்த்தியை அணுகியுள்ளதாக சனிக்கிழமை செய்திகள் வெளியாகின.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முன்னணியில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இதில் ஆதிகுணசேகரனாக நடித்த மாரிமுத்து இறந்தபின் அடுத்ததாக அந்த கதாபாத்திரத்திற்கு யார் வருவார் எனும் கேள்வி இருந்தது. பல நட்சத்திரங்கள் இவருக்கு பதிலாக நடிக்க போவதாக கருத்துகள் உலாவின.

இந்நிலையில் இன்று ஆதிகுணசேகரனாக வேலராம மூர்த்தி எண்ட்ரீ கொடுத்துள்ளார். சக்தியும் ஜனனியும் கதிர் மற்றும் ஞானத்தின் மீது போலிஸில் புகார் கொடுக்க அவர்கள் இருவரையும் போலிசார் கைது செய்கிறார்கள். பின் அவர்களிடம் விசாரிக்கும்பொழுது அவர்கள் ஏற்கனவே பார்த்த சாமியார் இருந்த இடத்திற்கு அழைத்து செல்கின்றனர்.ஆனாலும் போலிசாருக்கு அவர்கள் மேல் இருந்த சந்தேகம் குறையவில்லை. அதனால் அவர்களை ஒரு இடத்திற்கு அழைத்து சென்று போலிசார் அவர்களை தாக்குகின்றனர். அந்த சமயம் ஆதி குணசேகரன் காரில் இருந்து இறங்கி வந்து தனது தம்பிகளை போலிஸிடம் இருந்து காப்பாற்றுகிறார். அதே சமயம் சக்தியின் வீட்டில் நந்தினிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

அப்போது மாமியார் மருமகள்களை வீட்டை விட்டு வெளியே போங்க..நாங்க பாத்துகிறோம் என கூறுகிறார். அதற்கு நந்தினி அப்படியெல்லாம் வெளியே போக முடியாது..என் புருஷன் வந்து என்னை போக சொல்லட்டும்..அவனிடம் ஒரு காட்டு காட்டிவிட்டுதான் செல்வேன்.. என கூறுகிறார். பின் நந்தினி தன் அப்பாவிடம் அவங்க அண்ணன கூட்டிட்டு வந்து ரொம்ப பேசுவாங்க…ரோஷம் வந்து என் பெண்ணை கூட்டிட்டு போறேனு மட்டும் சொல்லிடாதீங்க..நான் இந்த வீட்டுல பேச வேண்டியது நிறைய இருக்கு.. என கூறுகிறார்.

பின் தான் இந்த வீட்டில் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் தனது தந்தையிடம் கூறி அழுகிறார். இந்த அம்மாவிற்கு நாங்க தினமும் குளிச்சிட்டுதான் இந்த மாடிபடியைவிட்டு இறங்கணும். இல்லனா இந்த சாமி இங்க இல்லாம போய்டுமாம். ஆனா இவங்க பையன் மட்டும் அந்த சாமி முன்னாடி இருந்து குடிப்பான்…அப்போ மட்டும் இந்த மீனாட்சி சிரிச்சிட்டு இருப்பாளாம்… என தனது ஆதங்கத்தை தனது தந்தையிடம் கொட்டி தீர்த்து விடுகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது. ஆதி குணசேகரன் நாளை வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தால் என்ன நடக்கும் என்பது தெரியும்.

அதில், கோயில் வாசலில் குணசேகரன் வந்து அமர்ந்து, கதிர், ஞானமும் ஆகியோருடன் பேசுகின்றனர். உடனே ஜனனி, ” அடுத்தவங்களை பத்தி நீங்க எப்போதுமே கவலைப்படாதே இல்ல. எல்லாமே உங்களுக்கு நடக்கணும், எப்ப தான் நீங்க மாற போறீங்களோ என்றார்.

பின்னர் விசாலாட்சி மூத்தவர் வந்துருவான், எல்லாரும் அலங்காரம் பண்ணிக்கிட்டு கீழே வாங்க என சொல்கிறார். இதை தொடர்ந்து பேசும் நந்தினி எங்களை என்ன பொண்ணு பாக்கவா வராங்க..” என தன் பாணியில் சொல்கிறார்.

வேல ராமமூர்த்தி கூறுகையில், “மாரிமுத்துவின் மறைவுக்குப் பிறகு அந்த கேரக்டரில் நடிக்க சேனல் என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் இப்போது நான் படங்களில் பிஸியாக இருக்கிறேன். இப்போதும் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறேன். எனக்கு நேரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. சீரியலில் நடிக்கிறேன். 20ம் தேதிக்கு பிறகு எனது படங்களின் படப்பிடிப்பு நிறைவடையும். என்னை சோப் ஓபராவில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்பது உண்மைதான். ஆனால் அது குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்