நடிகை த்ரிஷா நடித்துள்ள ‘தி ரோடு’ திரைப்படம் நாளை அக்டோபர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பழிவாங்கும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது, மேலும் படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை கோலிவுட்டில் தனது ஷெட்யூலில் பிஸியாக இருக்கும் நிலையில், அஜித்தின் அடுத்த ‘விடா முயற்சி’ படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
அஜித் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் ’விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. ஆனால் படப்பிடிப்பு நடைபெறும் தேதி தாமதமாகி கொண்டே வந்த நிலையில் ஒரு வழியாக இன்று அஜர்பைஜானில் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் இன்றைய முதல் நாள் படப்பிடிப்பில் அஜித் மற்றும் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாளே ரொமான்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்ததாக தெரிகிறது.
மேலும் இந்த படத்தில் சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்குனர் ஆகவும் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணிபுரிய இருப்பதாகவும் இருவருமே ஏற்கனவே அஜர்பைஜானில் தான் இருக்கின்றார்கள் என்றும் கூறப்படுகிறது. எடிட்டர் ஸ்ரீகாந்த் ஏற்கனவே அஜித் நடித்த ’மங்காத்தா’ மற்றும் மகிழ்திருமேனி இயக்கிய சில படங்களில் பணிபுரிந்துள்ளார்.
சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்குனர் என்பதால் இந்த படத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இன்னும் சில வாரங்கள் ரொமான்ஸ் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் அதன் பின்னர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் சென்னை வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையிலே பானு பிரகாஷ் அஜித்தின் மேனேஜரை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது அஜித் தன் மேனேஜருக்கு போன் செய்து பேச அவரோ சார், பானு பிரகாஷ் இங்கு தான் இருக்கிறார் என்ற கூறியிருக்கிறார். உடனே அஜித் போனை பானு பிரகாஷிடம் கொடுக்கச் சொல்லி பேசியுள்ளார்.என்ன நல்லா இருக்கிறீர்களா, வீட்டில் அனைவரும் நலமா என்று அஜித் விசாரிக்க பானு பிரகாஷ் தனது மகன் ராஜ் பற்றி தெரிவித்துள்ளார். உடனே அஜித்தோ ராஜின் புகைப்படத்தை தனக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.
பானு பிரகாஷ் தனது மகனின் புகைப்படத்தை அனுப்பி வைக்க அதை பார்த்த அஜித்தோ, பையனுக்கு நடிகர் ஆகும் அனைத்து அம்சங்களும் உள்ளது. நல்லபடியாக நடந்து கொண்டால் திரையுலகில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றாராம்.
அஜித் சொன்ன பிறகே மகனை நடிகராக்கும் முயற்சியில் பானு பிரகாஷ் இறங்கியிருக்கிறார். அந்த நேரம் தான் 100 பட வாய்ப்பு வர மகனை நடிகராக்கிவிட்டார். பானு பிரகாஷும், அஜித்தும் சேர்ந்து அமராவதி படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
த்ரிஷாவின் ‘லியோ’ படமும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் ஆகியோர் நடித்துள்ளனர். மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.