டெல்லியில் செய்யப்பட்டு வரும் இணையதள செய்தி நிறுவனமான ‘NEWSCLICK’ அலுவலகத்துக்குச் சீல் வைத்தது டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) கீழ் நியூஸ் கிளிக்கிற்கு எதிராகப் புதிதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்றுச் செயல்பட்டு வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்திய பல ஆவணங்களைக் கைப்பற்றியதாகச் சிறப்புப் பிரிவு காவல்துறை தெரிவித்தது
அதேசமயம், தற்போது இந்த சீல் வைத்தல் நடவடிக்கை, இந்தியாவில் ஊடக சுதந்திரத்தை அடக்குவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, நியூஸ் கிளிக் வெளியிட்ட அறிக்கையில், “இது ஒரு பயங்கரமான நடவடிக்கை. இது ஊடக சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அங்கு இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் சில ஊடகவியலாளர்கள் விசாரணைக்காகக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது