Saturday, June 22, 2024 12:18 pm

ஆசிய விளையாட்டு போட்டி : நேபாள் அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார் ஜெய்ஸ்வால்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சீனாவில் உள்ள ஹாங்சோ நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கிரிக்கெட்டில் முதல் காலிறுதி ஆட்டத்தில் நேபாள அணிக்கு எதிரான டி20 போட்டியில், முதலில் விளையாடிய இந்திய அணி 202 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் நேபாள அணிக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 100 ரன்கள் குவித்து அசத்தினார். இது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முதல் டி20 சதம் ஆகும். ஜெய்ஸ்வாலுக்கு ருத்துராஜ் கெய்க்வாட் 25 ரன்கள், துபே 25 ரன்கள் மற்றும் ரிங்கு ஷெட்டி 37 ரன்கள் ஆதரவு அளித்தனர்.

இப்போட்டியில், தற்போது நேபாள அணி வெற்றி பெற, 203 ரன்களை 20 ஓவர்களில் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்