Tuesday, April 23, 2024 12:07 am

எதிர்நீச்சல் சீரியலில் அநாகரீகமாக பேசிய கதிரை ஓங்கி அறைந்த ஈஸ்வரி !அதிர்ச்சியில் உறைந்த விசாலாட்சி!விறுவிறுப்பான எதிர்நீச்சல் எபிசோட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

குணசேகரன் வீட்டில் இருந்து மறைந்த மர்மமான பிறகு, கதை ஒரு புதிய திருப்பமாக அமைக்கப்பட்டுள்ளது, மேலும் அதைப் பற்றி அறிய ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். ஆதி குணசேகரன் இன்னும் உயிருடன் இருப்பதை சாமியாரின் உதவியால் ஜனனியும் கதிரும் கண்டறிந்தனர்.ஜனனியும் கதிரும் தங்கள் அண்ணனை திரையில் பார்க்கும்போது உணர்ச்சியில் மூழ்கிவிடுகிறார்கள். அவர்கள் போதகருக்கு மனமார்ந்த நன்றி மற்றும் அவரது உதவிக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
சாமியார் ஜனனிக்கும் கதிருக்கும் அறிவுரை கூறுகிறார்சில தனிப்பட்ட பிரச்சினைகளால் போராடிக் கொண்டிருந்த குணசேகரனை அருகிலுள்ள நகரத்தில் கண்டதாக சாமியார் விளக்குகிறார்.

இந்நிலையில் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோடில் நந்தினி மிகவும் வருத்தப்பட்டு பேசுகிறாள்.”வெளியே தைரியமாக பேசினாலும் உள்ளுக்குள்ள நாம அத்தனை பேருக்கும் அவ்வளவு பயம் இருக்கு. இது தான் விதி” என சொல்கிறாள். பிள்ளைகள் அனைவரும் அவர்களின் அம்மாவை நீங்கள் வெளிய போய் உங்களுக்கு பிடித்த மாதிரி இருங்கள் என சொல்கிறார்கள். “வெளியே போவதால் மட்டும் இவர்கள் மாறி விடமாட்டார்கள். பெரியதாக அவர்கள் அடிபட்டால் மட்டுமே திருந்துவார்கள்” என்கிறாள் ஈஸ்வரி. “அப்படியே அமைதியாக இருக்க முடியாது இப்படியே அவரை வெளியே வரவைக்க வேண்டும். எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்” என ஜனனி சொல்கிறாள்.

அடுத்த நாள் காலை ஞானம் கதிரிடம் ஒரு வேலையை பார்க்க சொல்கிறான். ஆனால் கதிர் ஞானத்திடம் சண்டையிட்டு உன்னால் முடிந்தால் பாரு இல்லாட்டி வாயை மூடு என்கிறான். கதிர் காபிக்காக நந்தினியை கூப்பிடுகிறான் ஆனால் அவள் வராததால் கரிகாலன் சென்று சமையல் அறையில் பார்க்கிறான். அங்கு யாருமே இல்லை. காலையில் இருந்து வீட்டில் எந்த பொம்பளை ஆட்களையும் காணவில்லை பிள்ளைகளையும் காணவில்லை என வீடு முழுக்க தேடுகிறர்கள். ஆனால் அவர்கள் யாருமே கண்ணில் தென்படவில்லை.

நெகட்டிவ் ஷேட் இருந்த போதிலும் இந்த கேரக்டருக்கு தன்னுடைய சிறப்பான நடிப்பால் உயிர் கொடுத்திருந்தார் மறைந்த நடிகர் மாரிமுத்து. இந்தாம்மா ஏய் என்ற இவரது டயலாக் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அந்த வகையில் இந்த கேரக்டருக்காக தன்னுடைய உடல்மொழியால் சிறப்பு சேர்த்திருந்தார். சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மறைந்த நிலையில், சீரியல் தரப்பினர் மட்டுமில்லாமல் ரசிகர்களும் அதிகமான அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

நடிப்பு, இயக்கம், தொலைக்காட்சி தொடர் என பன்முகம் காட்டிவந்த மாரிமுத்து, உயிரிழந்தது, இநத்த் தொடருக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. இந்த கேரக்டர் அவரை பட்டி தொட்டியெல்லாம் ரசிகர்களிடையே சேர்த்த நிலையில், அவருக்கு மாற்றாக சீரியலில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து ரசிகர்களிடையே காணப்படுகிறது. சில ட்விஸ்ட்களுடன் இந்த கேரக்டரை சீரியலில் சேர்க்க இயக்குநர் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கேற்க காட்சிகள் காணப்படுகின்றன.முன்னதாக இந்த கேரக்டரில் மாரிமுத்துவிற்கு பதிலாக பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இந்த கேரக்டரில் ராதாரவி, பசுபதி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் வேல ராமமூர்த்தி போட்ட கண்டீஷன்களுக்கு சீரியல் தரப்பு ஒப்புக் கொண்டுள்ளதால் அவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆதி குணசேகரன் கேரக்டரில் அலட்சியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மாரிமுத்து. பெண்களைக கட்டுப்படுத்தி ஆள நினைக்கும் இந்த கேரக்டர் அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது. இந்நிலையில் வேல ராமமூர்த்திக்கும் அதே போன்றதொரு உடல்மொழி காணப்படுவதை அவரது படங்களில் பார்க்க முடிகிறது. இதனால் அவர் ஆதி குணசேகரன் கேரக்டருக்கு சிறப்பாக பொருந்துவார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

மாடிக்கு சென்று பார்த்தால் அனைவரும் பால்கனியில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஞானமும் கதிரும் கத்தினாலும் அவர்கள் எதையும் சட்டை செய்யாமல் அமைதியாகவே இருக்கிறார்கள். “என்ன ஸ்ட்ரைக் பண்றீங்களா? நீங்க என்ன செய்தாலும் எதுவும் நடக்காது” என்கிறான் ஞானம். விசாலாட்சி அம்மாவும் வந்து சொல்லியும் யாரும் கேட்கவில்லை. ஜனனி தான் காரணம் என அவளை திட்டுகிறார்.தர்ஷினி, ஐஸ்வர்யா, தர்ஷன், தாரா என அனைவரும் விசாலாட்சி அம்மாவிடம் நியாயம் கேட்கிறார்கள். “எங்க அம்மாவை தப்பாக பேசுவதற்கு எங்க அப்பாவுக்கே உரிமை இல்ல. அதிலும் மத்தவங்க எல்லாம் பேசுறது ரொம்ப தப்பு. கதிர் சித்தப்பா பேசுறது ரொம்ப தப்பு” என்கிறான் தர்ஷன். “உங்க அம்மா பண்றது எல்லாம் நல்ல விஷயம் பாரு. அவளை பேச கூடாது” என தப்பாக பேசுகிறான் கதிர்.

“எங்களால் தான் உங்க அண்ணன் போனாரு. அது தான் கண்டு பிடுச்சுடீங்களே கூட்டிட்டு வர வேண்டியது தானே. ஏதோ செருப்பை கொண்டு வந்து காட்டிட்டு எங்களை எல்லாரையும் டார்ச்சர் செய்றீங்க” என்கிறாள் ஈஸ்வரி. “தர்ஷன், தர்ஷினியும் எங்க அப்பா எங்கன்னு எனக்கு தெரியணும்” என்கிறார்கள். கதிர் அநாகரீகமாக ஈஸ்வரியை பேச அவள் அவனை பளார் என கன்னத்தில் அறைந்து விடுகிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்