- Advertisement -
நடைப்பயிற்சி என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். இது உடல் எடையைக் குறைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, மன அழுத்தத்தைக் குறைக்க, மற்றும் பல நன்மைகளை அளிக்கிறது.
நடைப்பயிற்சியை முறைப்படி செய்வது மிக முக்கியம். நடைப்பயிற்சியின் போது ஒரே வேகத்தில் நடக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிப்பது நல்லது. இதனால், உடல் முழுவதும் உள்ள தசைகள் வேலை செய்யும். சமதளத்தில் நடப்பதை விட உயரமான பகுதியை நோக்கி நடந்தால் கூடுதல் கலோரிகளை எரிக்கும்.
மேலும், இது உடலுக்கு ஒரு சிறந்த சவாலாக இருக்கும். ஒரே அளவிலான தூரம் நடப்பதைவிட நமது உடலுக்கு ஏற்றபடி தூரத்தைத் தேர்வு செய்யலாம்.
நடைப்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பும், பின்னரும் வார்ம்அப் முக்கியம். இது காயங்களைத் தடுக்கவும், உடலை தயார்ப்படுத்தவும் உதவும். எனவே, அனைவரும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
- Advertisement -